இன்று ஓர் இனிய தகவல் 01/08/2022 திங்கட்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 01/08/2022 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் ✡️✡️✡️✡️✡️✡️✡️ *வாழ்க்கை வாழ்வதற்கே* பிரச்சினைகள் இல்லாத மனிதன் யார்? வாழ்க்கை எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை வாழ்வில் பிரச்சினைகளும்..... வாய்த்தவர்களுக்குத்தான் வாழ்க்கை என பலர் வறட்டுக் கௌரவம் பேசுகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, நம்முடைய மனம்தான் பிரச்சினைகளின் பிள்ளையார் சுழி, அது தான் ஆணிவேர், பிரச்சினைகள் விருட்சமான பின் ஆணிவேரைத் தேடுவதில் அர்த்தமில்லை. வாழ்க்கையின் தாத்பரியமே நல்லெண்ணங்கள் தான். நல்லெண்ணம் இல்லாமல் ஆரம்பிக்கும் எந்தவொரு செயற்பாடுமே இறுதியில் பிரச்சினை என்ற வட்டத்திற்குள்தான் சிக்குண்டு போகும். பின்னர் அந்த சிக்கல்களை சமாளிப்பதிலேயே காலமும் காணாமல் போய்விடும். காலம் எதற்காகவும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை. பயம், கவலை, வெறுப்பு, காமம் போன்...