Posts

Showing posts from March, 2025

மனவளக்கலை ஒரு பெட்டகம்

 மனவளக்கலை ஒரு பெட்டகம் தான் உயரவும், பிறரையும் உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன. இரண்டு வேளையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி, அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவையுண்டாகும். தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை – வினைப் பதிவுகளை மாற்றி விடலாம். ஆசைச் சீரமைப்புப் பயிற்சி செய்யுங்கள். உடல் நலம், மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதி உண்டாகும். சினம் தவிர்ப்புப் பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யும் இடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு இவை பெருகும். இனிமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். கவலை ஒழிப்புப் பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும். நான் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு, அனைத்து மறை பொருட்கள், மனம், உயிர், மெய்ப்பொருள் உணர்வு உண்டாம். இவ்வளவு பயிற்சியும், பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்க...

மனதின் தப்புகணக்கே கவலை

 மனதின் தப்புகணக்கே கவலை மனிதனின் கவலைகள் நான்கு விதமானவை என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார்கள். 1.அனுபவித்தே தீர வேண்டியது ; இந்தக் கவலைகளை அனுபவித்தே ஆக வேண்டும். வேறு வழியல்லை. கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், நேரம் வீண். தேவையற்ற மன உளைச்சல். உறவினர் மரணம், உறுப்பு இழப்பு போன்றவை. மாற்ற இயலாது. அனுபவித்தே ஆகவேண்டியது. 2.அலட்சியப்படுத்த வேண்டியது; இந்தக் கவலைகளை அலட்சியப்படுத்த வேண்டும். இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால், நேரம் வீண். மன உளைச்சல். அடுத்தவீட்டுக்கார் நம்மை கிண்டல் செய்வது. வீட்டில் பெரியவர்கள் அவ்வப்போது, நம்மை அவர்களுடன் ஒப்பிட்டு தவறாக குறை கூறுவது. 3.தள்ளிப்போட வேண்டியது; இந்தக் கவலைகள் ஒரு நாளில் சரிசெய்ய முடியாது. முயன்று கொண்டே இருக்க வேண்டும். காலம் சரியாக அமையும் போதுதான் தீரும். திருமணத்திற்கு வரன் பார்ப்பது. வேலை தேடுவது. 4.உடனே தீர்க்க வேண்டியது; இந்தக் கவலைகள் உடனே தீர்க்கப்பட வேண்டியவை. தள்ளிப்போட்டாலோ, அலட்சியம் செய்தாலோ, ஆபத்து. உடம்பில் கட்டி , வீட்டில் சொத்து பிரச்சனை. இப்போது நீங்கள்செய்ய வேண்டியது: 1.உங்களுக்கு தியானம் தெரிந்தால் தியானம் செய்துவிட...

உடல் நலத்தோடும் மனநலத்தோடும் வாழ்வதே முழுமை நலவாழ்வு

 முழுமை நலவாழ்விற்கு மனவளக்கலை (SKY)-யோகா. "உடல் நலத்தோடும் மனநலத்தோடும் வாழ்வதே முழுமை நலவாழ்வு." உடலில் நீடித்த வலியோடும் , மனதில் பொருள், புகழ்,செல்வாக்கு, புலனின்பம் நான்கும் இன்னும் வேண்டும் எனக்கே வேண்டும் என்ற ஆசையோடும் வாழ்வது உடல்  மன துன்பவாழ்வு. உடல் மன துன்பமில்லாத வாழ்வே முழுமை நலவாழ்வு.முழுமை நலவாழ்வே அமைதி வாழ்வு. முழுமை நலவாழ்விற்கு, தன்னையோ கடவுளையோ அறியும் மனப்பயிற்சியே(Meditation and introspection)யோகக்கலை.தற்காலத்திற்கேற்ப எளிமைப்படுத்தப்பட்டுள்ள யோகக் கலையே (Yoga for modern age) மனவளக்கலை (Vethathiri SKY). உடலுக்கும் உயிருக்கும் மனத்திற்கும் பயிற்சிகள் அளித்து,மெய்ப்பொருளே ஐம்பூதங்களாகி அண்டங்களாகவும், ஓரறிவு தாவரம் முதல் ஐயறிவு சீவன்களாகி, இயற்கையை இரசித்து இன்பமுற மனித சமுதாயமாகவும் வாழ்வதை அறிந்த அறிவே தன்னையோ கடவுளையோ  அறிந்த அறிவு என்பதாகும். மெய்ப்பொருளே மனித சமுதாயமாக வாழ்வதை அறிந்ததும்,  1)தன்னை இயற்கையிலிருந்தும் சமுதாயத்தில் இருந்தும் வேறாக கருதும் தான் தனது என்ற தன்முனைப்பும் (ஆணவம்), பேராசை, சினம்,கடும் பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, ...

சிவராத்திரியின் மகிமை

 சிவராத்திரியின் மகிமை என்ன? பதில் : "லூமினிபெரஸ் ஈத்தர்" ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு  பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து  தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும்.  இதனால் பல நன்மைகள் உண்டு.  இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது.   எனவேதான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அறிவியல் பூர்வமாக ஆதாரம் வேண்டும் என்றால் இங்கே நான் கொடுத்திருக்கும் சில படங்களை பார்த்துக்கொண்டே நான் சொல்வதைக் கேளுங்கள். ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது.  இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது.  மேலும் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறது. பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.  இதில் இரண்டு நீள்வட்ட பாதையில் உள்ளது.  ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை.  பூமி பெரிய நீள்வட்...

கவலையை தூர எறியுங்கள்

 'கவலையை தூர எறியுங்கள்...!'' கவலைப்படும் பழக்கம் ஒரு நோய். கவலை எனப்படுவது தொடக்கத்தில் ஒரு பழக்கமாகி, பின்னால் அதுவே ஒரு நோயாக ஆகிவிடுகிறது என்கின்றனர் உளவியல் ஆளர்கள்... அதாவது!, கவலைப்படுவது என்பது ஒருவனது இயல்பு, குணம் என்றாகி விடுகிறது. பயம், நடுக்கம், கவலை என்பதெல்லாம் பிறர் உருவாக்குவதில்லை. நாமே உருவாக்கிக் கொள்கிறோம்... நம்முடைய அறியாமையால் உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம். ஒவ்வொருவனின் தலை மீதும் இரண்டு சுமைகள். அதுவே அவனை அவதிக்கு உள்ளாக்குகின்றன... ஒன்று!, கடந்த காலத்தில் அவன் பட்ட துன்பங்களின் மறு நினைவு. மற்றொன்று எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்ற அச்ச விளைவு. வெற்றியை விரும்புவோர் இந்த இரண்டு சுமைகளையும் தூக்கி தூர எறிந்து விட்டு, வாழ்க்கையை அனுபவிக்கவும், அதை முன்னோக்கிச் செலுத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும்... உளவியல் அறிஞர் வழக்கம் போல் கணினித் துறை பணியாளர்களுக்கு மன இறுக்க மேலாண்மை குறித்துப் பாடம் எடுத்து கொண்டிருக்கிறார்... எளிமையாக அனைவரிடமும் கலந்துரையாடிக் கொண்டே மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நெகிழ்பானின் மூடியைத் திறந்து பக்கத்தில் வைத்து இ...

சித்தர்கள் நான்கு வகையினர்

 சித்தர்கள் நான்கு வகையினர்... 1. கர்ம சித்தர் 2. யோக சித்தர் 3. ஞான சித்தர் 4. அருட்சித்தர் இதில் வள்ளலார் அருட்சித்தர் ஆவார். உடம்பு நிலையற்றது என்று உணர்ந்தவர்கள் முதல் மூன்று வகை சித்தர்கள் மரணம் தவிர்க்கமுடியாதவர்கள். ஆனால் அருட்சித்தரான வள்ளலார் மரணம் செயற்கை என்றும் இந்த தேகத்தை நித்தியதேகமாக்கிக் கொள்ளவதே சுத்த சன்மார்க்க சாகாக்கல்வியின் பயன் என்று உலகவர்க்கு எடுத்துக்காட்டி... 1. தேக சுதந்திரம் 2. போக சுதந்திரம் 3. ஜீவ சுதந்திரம்  என்னும் மூன்று வகை சுதந்திரங்களையும் அருட்பெருஜோதி ஆண்டவர்க்கு அர்ப்பணம் செய்து ஆண்டவரின் அருட்சுதந்தரத்தை வேண்டிப்பெற்று நித்தியாராக திகழ்கிறார்!

தியானத்தின் நன்மைகள்

 தியானத்தின் நன்மைகள் விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள். உடலளவில் ஏற்படும் நன்மைகள் :- 1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத்துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது. 2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது. 3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. 4. உடலில் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது. 5. உடல் முழுவதற்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது. 6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன. இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம். 1. மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது. 2. மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது. 3. “As a man thinketh, so he becomes it”, A man is what he thinks all day long” என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து....

யார் மெய்ஞானி?

 இயற்கையும் மெய்ஞானமும்! யார் மெய்ஞானி?  இருளும் (மெய்ப்பொருள்-GOD), ஐம்பூதங்களாலான அண்டங்களும், ஐம்பூதங்களும் முறையாகக்கூடி இயங்கும் ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை அனைத்து உயிரினங்களும் இயற்கை.        மெய்ப்பொருள் முதல் மனித மனம் வரை இயற்கையின் அமைப்பு, இயக்கம், விளைவுகளை தெளிவாக அறிந்த அறிவே.மெய்ஞானம்.       மெய்ஞானம் ஓங்கி வாழும் மெய்ஞானிக்கு, 1)நான் என்ற அகந்தையும், எனது என்ற பற்றும் பாசமும் அற்றுப் போகும். அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அன்பு மலரும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் யாதும் ஊரே யாவரும் கேளிர்"என்ற உண்மை விளங்கி விடும்.  2) இன்பம் துன்பம், அமைதி பேரின்பம் என்பது என்ன என்பது தெளிவாக விளங்கி விடும்.  3) பேராசை முதலான ஆறு விலங்கு குணங்களும் நிறைமனம் முதலான ஆறு மனித குணங்களாக மாற்றம் பெற்று விடும்.  4) உடல் நலத்தோடு நீண்ட காலம் வாழும் அறிவும், நிறை செல்வந்தராக வாழும் அறிவும், உயர் புகழோடு வாழும் அறிவும் உள்ளுணர்வாக விளங்கி விடும்.  5)நிகழ்கால உலக இன்பங்களைத் துய்த்து மன நிறைவு பெற்று துன்பமோ கவலையோ இல்லாமல் வா...

இறை உணர்வுக்கும் அறநெறி அறிவுக்கும் மெய்ஞானம் ஓங்கி வாழ மௌன நோன்பு!

 இறை உணர்வுக்கும் அறநெறி அறிவுக்கும் மெய்ஞானம் ஓங்கி வாழ  மௌன நோன்பு!  அமைதியான இடத்தில் தனித்து மௌன நோன்பு இருக்க வேண்டும். தேவையில்லாமல் கண்களைத் திறக்கவோ, படிக்கவோ, எழுதவோ, நடமாடவோ வேண்டாம். உடல் நல மேம்பாட்டுக்கு, உடற்பயிற்சியோடு காயகற்ப பயிற்சியும், அனைத்து வேதாத்திரிய  தவங்களையும் முறையாகச் செய்து வர வேண்டும். மன அழுத்தம் குறையவும், தவ ஆற்றல் கூடவும் எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் ஆகிய தற்சொதனைப் பயிற்சிகளை முறையாகச் செய்து வர வேண்டும்.  மெய்ஞானம் ஓங்கி வாழ, இறைநிலைதவம் செய்து சுத்தவெளி முதல் மனித மனம் வரை இயற்கையின் அமைப்பு,இயக்கம், விளைவுகளை அகக்காட்சியாகக் காண வேண்டும். மனம் விரிந்து  இயற்கையோடு கலந்து விடும்.அறிவு முழுமை பெறும்.தெய்வம் எது? என்பதும் நான் யார்? என்பதும் உள்ளுணர்வாக விளங்கிவிடும்.மெய்ஞானம் மலரும்.  உடல் நலத்தோடு நீண்ட ஆயுளோடும் வாழ, உடலில் ஐம்பூதங்களின்  அளவு மற்றும் தரத்தையும், சீவகாந்தசக்தியின் செறிவு மற்றும் ஓட்டத்தையும் சீராக பராமரித்து வாழும் அறநெறிகள் உள்ளுணர்வாக விளங்கிவிடும். ...

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள்... இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.  எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்களுக்கு கஷ்டங்கள் வராது. ஆலயங்களும், அமைவிடங்களும்: அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது.  பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது. கார்த்திகை - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ.,...

உடை ஒழுக்கம்

உடை ஒழுக்கம் மானத்தைக் காப்பதற்கும், வெப்ப தட்பமாறுதலால் எழும் துன்பம் போக்குதற்கும், வானத்தே பூமத்திரேகைக் கேற்ப வந்துலவும் ஒளி அலைகட்கேற்பவும், விஞ்ஞானத்தின் அடிப்படையில் நம்வாழ்விற்கு நலமளிக்கும் உடைகளையே அணிவோம், புத்திஈனத்தால் அங்கமெலாம் எடுப்பாய்க் காட்டும் இழிவான ஆடைகள்  அன்றணிவார் ஏது? *-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி*  (ஞானக்களஞ்சியம்)  பாடல் எண்:335

மனிதன் ஏன் கடவுளை அறிந்து வாழ வேண்டும்?

 மனிதன் ஏன் கடவுளை அறிந்து வாழ வேண்டும்?  அகத்தவம் (தியானம்) செய்து கடவுளை அறிந்த மனிதனுக்கே, 1) பொருள் ஈட்டி, புலன் இன்பங்களைத் துய்த்து வாழ்வதற்கே கடவுள் மனிதனாகப் பிறந்து வாழும் உண்மை(தத்துவம்) விளங்கும்.  2)இயற்கையிலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் தன்னை வேறாகக் கருதும் தன்முனைப்பு (ஆணவம்)  அழிந்து சகோதர அன்பு (சம உணர்வு) மலரும்.      3)மனதில் உள்ள பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு தீயகுணங்களும் நிறைமனம், பொறுமை, ஈகை, கற்பு, சமஉணர்வு, மன்னிப்பு ஆகிய ஆறு நற்குணங்களாக மாற்றம் பெற்று மனம் தூய்மை பெறும்.   4)மனத்தூய்மை பெற்ற மனிதனே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய இயற்கைநீதியை மதித்து, சமுதாயத்தோடு இணைந்து தேவையான பொருட்களை அறவழியில்  ஈட்டிப் பகிர்ந்து, தனக்கும் பிறருக்கும் நல்லதைச் செய்து உடல் நலத்தோடும், பொருள் வளத்தோடும், நட்பு நலத்தோடும், உலக இன்பங்களைத் துய்த்து *மனநிறைவு(அமைதி)பெற்று இறைநிலையை (பிறவாதநிலையை) அடைவான்.  கடவுளை அறியும் கலையைக் கற்று எல்லோரும் வாழ்வாங்கு வாழ்ந்து இற...

நமது உடலும் சூட்சும சக்திகளும்..!

 நமது உடலும் சூட்சும சக்திகளும்..! 1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம் செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை. நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது. 2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது. 3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது. 4. ஒவ்வொரு மனிதனுக்கும்  சூட்சும  சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும். 5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது. 6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும். 7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது. 8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது. 9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது. 10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி. 11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி...

ஒரே ஒரு வார்த்தை… அது உங்கள் வாழ்க்கையையே மாற்றும்!

 ஒரே ஒரு வார்த்தை… அது உங்கள் வாழ்க்கையையே மாற்றும்! * 🌹🌹🌹ஒரே ஒரு வார்த்தை அது உங்கள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தது. வாழ்க்கையையே மாற்றக்கூடிய அந்த வார்த்தை என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. “நன்றி” “Thanks” இதுதான் அந்த வார்த்தை. இதைப் பற்றி இந்த பதிவில் நாம் சற்று பார்க்கலாம். நமது அன்றாட வாழ்க்கையில் நமக்கு உதவுபவர்கள் பலர் உள்ளனர். பிறர் உதவியின்றி நம்மால் வாழ முடியாது என்பதே நிதர்சனம். ஒரு புதிய ஊருக்குச் செல்கிறோம். அங்கு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வழியில் தென்படும் யாரிடமாவது வழி கேட்க வேண்டிய சூழ்நிலை. நாம் அவரிடத்தில் வழி கேட்டால் நமக்கு சரியான வழியைக் காட்டி உதவுகிறார். அவருக்கு ஒரு நன்றி சொல்லுங்கள். அவருக்கும் மகிழ்ச்சி. நமக்கும் மகிழ்ச்சி. நம்மில் பலர் பல சமயங்களில் பிறரிடம் உதவியைப் பெற்றுக்கொண்டு காரியம் முடிந்ததும் உதவி செய்தவரைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றனர். இது மிகவும் தவறான செயலாகும். நமக்கு உதவியவர் களுக்கு நன்றியைத் தெரிவித்து பிறகு அவரை எங்கே பார்த்தாலும் சிநேகமாக ஒரு புன்னகை செய்து விட்டுச் செல்லுங்கள். ஒரு துறவி நடந்து சென்று கொண்டி...

நாவிருந்து புறப்படும் வார்த்தை

 ''நாவிருந்து புறப்படும் வார்த்தை...!" ........................................................................... நாக்கு வன்மையானதுதான். நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது... இதைக் குறித்து வள்ளுவர் தனது 129 - வது குறட்பாவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. அதாவது!, தீயினால் சுட்டப்புண் வெளியே வடு இருந்தாலும், உள்ளே ஆறிவிடும். ஆனால்!, நாவினால் பிறரை தீயச்சொல் கூறிச் சுடும் வடுவானது என்றுமே ஆறாது என்கிறார்... . பேச்சாற்றல் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு. மற்ற உயிர்களிடமிருந்து ஈந்த பேச்சாற்றல்தான் நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது... மனிதனால் பேசாமல் வாழமுடியாது. மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு பேச்சுத்தான் வடிவம் கொடுக்கிறது. பேச்சு என்பது மிகப்பெரிய கலை... ஒவ்வொருவரின் நாவிருந்தும் புறப்படும் வார்த்தை மற்றவருக்கு மகிழ்ச்சியைத் தரலாம்... சிலருக்கு,மனதை உடைத்தெறியலாம். நம்பிக்கையை உடைத்தெறியலாம். ஆறாத வடுவை ஏற்படுத்தலாம். ஒருவரை சிந்தித்து வாழ வைக்கலாம். மற்றொருவரை தற்கொலைக்கும் த...

சரீரத்தில் ராசி, நட்சத்திரங்களின் ஆதிக்கம்!!!

 சரீரத்தில் ராசி, நட்சத்திரங்களின் ஆதிக்கம்!!! --------------------------------------------------------------------------------- 🌻 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை : * மேஷம் * ரிஷபம் * மிதுனம் * கடகம் * சிம்மம் * கன்னி * துலாம் * விருச்சிகம் * தனுசு * மகரம் * கும்பம் * மீனம் ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேஷம் -------------- 1. வைராக்கியம் (Assertiveness) 2. தேசநலன் (Citizenship) 3. நிறைவேற்றுதல் (Chivalry) 4. துணிச்சல் (Courage) 5. கீழ்படிதல் (Obedience) 6. வெளிப்படையாக (Openness) 7. ஒழுங்குமுறை (Order) 8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance) 9. ஆன்மிகம் (Spirituality) #மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும் ரிஷபம் ------------- 1. கருணை (Mercy) 2. இரக்கம் (Compassion) 3. காரணம் அறிதல் (Consideration) 4. அக்கறையுடன் (Mindfulness) 5. பெருந்தன்மை (Endurance) 6. பண்புடைமை (Piety) 7. அஹிம்சை (Non viol...

உண்மை அன்பை அறிந்து கொள்வதற்கான 10 அறிகுறிகள்.

 உண்மை அன்பை அறிந்து கொள்வதற்கான 10 அறிகுறிகள். 1 குறுக்கீடு செய்யாமல் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். 2  பாசாங்கு செய்யாமல் (நடிக்காமல்) உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். 3  குற்றசாட்டு கூறாமல் பேசுவாரகள்.  4.மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், புகார் கூறாமல் இருப்பர். 5.மிச்சம் வைக்காமல் கொடுப்பார்கள். 6.சந்தேகப்படாமல் சகலமும் நீங்கள் என நம்புவார்கள். 7.நிறுத்தாமல் தொடர்ந்து உங்களை வேண்டுவார்கள். 8  உங்கள் தவறுக்காக உங்களைத் தண்டிக்காமல் மன்னிப்பது. 9.உங்களுடன் வாதிடாமல் விடை தருவார்கள்.  10.உங்களுக்குக் கொடுத்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இருப்பார்கள். இன்னும் நிறைய இருக்கு புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்தால் மட்டுமே புரியும் உண்மையான அன்பு.

வெற்றியின் ரகசியம்

 வெற்றியின் ரகசியம் வெற்றியை பரிசளிக்கும் 6 பழக்கங்கள்  வெற்றியின் ரகசியம்: 60 நாட்களுக்கு இந்த 6 பழக்கங்களை கடைப்பிடித்து பாருங்க... | 6 Habits Of Most Successful People In The World 1. முதலாவது 60 நிமிடங்களுக்கு மேல் சமூக வலைத்தளங்களை பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். இன்று பெரும்பாலானவர்களின் வெற்றிக்கு பெரும் தடையாக இருப்பது சமூக வலைத்தளங்களின் அதிகரித்த பாவனை தான்.  2. தினசரி 60 நிமிடங்கள் ஏதாவது ஒரு புதிய விடயத்தை கற்றுக்கொள்வதற்கு முயற்சிசெய்யுங்கள். நமது ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், நாளுக்கு நாள் நமது அறிவுக்கு புதிய வேலைகளை கொடுக்க வேண்டியது அவசியம். 3. உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினசரி 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இது ஏனைய அனைத்து வேலைகளையும். புத்துணர்ச்சியுடன் செய்வதற்கு துணைப்புரியும். 4. உளவியல் ரீதியான பிரச்சினைகளில் இருந்த விடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி, இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் குறைந்தது தினசரி 10 நிமிடங்கள் தியானம் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். 5. மூளையை எப்போதும் புத்து...

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

 நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள் "பலர் நாள் முழுவதும் தங்கள் வாழ்வில் இயங்கும் ஒற்றைக் குரலை வழங்கும் ஒரு உள் குரலைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்" என்று சைக்காலஜி டுடே குறிப்பிடுகிறது . "இந்த உள் குரல் அல்லது சுய-பேச்சு, நனவான எண்ணங்கள் மற்றும் மயக்க நம்பிக்கைகள் மற்றும் சார்புகளை இணைத்து, தினசரி அனுபவங்களை விளக்குவதற்கும் செயலாக்குவதற்கும் மூளைக்கு ஒரு வழியை வழங்குகிறது." "எங்கள் சுய பேச்சு மகிழ்ச்சியாகவும் ஆதரவாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையான மற்றும் சுய-தோற்கடிக்கும்." இது நேர்மறையாக இருக்கும்போது, ​​​​சுய பேச்சு அமைதியாக இருக்கும் மற்றும் நம் நம்பிக்கையை அதிகரிக்கும். துரதிர்ஷ்டவசமாக, எதிர்மறையான சுய-பேச்சுக்கு ஈர்ப்பது நமது இயல்பு. பெரும்பாலும், எதிர்மறையான சுய-பேச்சு "என்னால் எதையும் சரியாகச் செய்ய முடியாது" அல்லது "நான் ஒரு முழுமையான தோல்வி" போன்ற கடுமையான உறுதிமொழிகளுக்கு வழிவகுக்கிறது. "எதிர்மறையான சுய-பேச்சின் பிரச்சனை என்னவென்றால், அது பொதுவாக யதார்த்தத்தை பிரதிபலிக்காது, எனவே அது மக்களை தவறாக நம்ப வைக்கும்,...

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு

 ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிரும் கெடும். (02) பாசத்தினால் பிள்ளை கெடும். (03) கேளாத கடனும் கெடும். (04) கேட்கும்போது உறவு கெடும். (05) தேடாத செல்வம் கெடும். (06) தெகிட்டினால் விருந்து கெடும். (07) ஓதாத கல்வி கெடும். (08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். (09) சேராத உறவும் கெடும். (10) சிற்றின்பன் பெயரும் கெடும். (11) நாடாத நட்பும் கெடும். (12) நயமில்லா சொல்லும் கெடும். (13) கண்டிக்காத பிள்ளை கெடும். (14) கடன்பட்டால் வாழ்வு கெடும். (15) பிரிவால் இன்பம் கெடும். (16) பணத்தால் அமைதி கெடும். (17) சினமிகுந்தால் அறமும் கெடும். (18) சிந்திக்காத செயலும் கெடும். (19) சோம்பினால் வளர்ச்சி கெடும். (20) சுயமில்லா வேலை கெடும். (21) மோகித்தால் முறைமை கெடும். (22) முறையற்ற உறவும் கெடும். (23) அச்சத்தால் வீரம் கெடும். (24) அறியாமையால் முடிவு கெடும். (25) உழுவாத நிலமும் கெடும். (26)உழைக்காத உடலும்  கெடும். (27) இறைக்காத கிணறும் கெடும். (28) இயற்கையழிக்கும் நாடும் கெடும். (29) இல்லாலில்லா வம்சம் கெடும். (30) இரக்கமில்லா மனிதம் கெடும். (31) தோகையினால் துறவு கெடும். (3...

பிறர் மனம் புண்படாமல் பேசிப்பழகுவோமா?

 பிறர் மனம் புண்படாமல் பேசிப்பழகுவோமா? 🌹🌹🌹பிறர் மனம் புண்படாமல் பேச வேண்டுமானால் முதலில் நாம் தேவையானபொழுது மட்டுமே பேசவேண்டும். தேவையற்ற நேரங்களில் வாயை திறப்பது தேவையற்ற பிரச்னைகளை உண்டு பண்ணும். சூழ்நிலைக்கேற்ப மற்றவர்களுக்கு இதம் தரும் வார்த்தைகளை பேசுவது அவசியம். நம்முடைய பேச்சு எந்த காரணத்தைக் கொண்டும்  மற்றவர்களின் மனதை காயப்படுத்துமாறு இருக்கக் கூடாது. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் பொதிந்ததாக இருக்க வேண்டும். பேச்சு என்பது ஒரு கலை. அதனைத்  தன்மையாக வெளிப்படுத்த வேண்டும். பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். எண்ணுவதையெல்லாம் பேசிவிடக்கூடாது. நமக்கும் மற்றவர்களுக்குமான தொடர்பே பேச்சில்தான் உள்ளது. மனதை புண்படுத்தும்  ஒரு சிறிய வார்த்தையால் ஒருவருக்கொருவர் பல ஆண்டுகள் பேசிக்கொள்ளாமல் இருப்பதையும் நாம்  பார்த்திருக்கிறோம். பேச்சால் வாழ்ந்தவர்களும் உண்டு;  வீழுந்தவர்களும் உண்டு. பிறர் மனம் புண்படாமல் அன்பாகப்  பேசி பழகுவது நல்லது. தீய பேச்சுக்களால் பிறரை காயப்படுத்துவதுடன், நம்மை கறைபடுத்திக் கொள்ளாமலும் இருக்கலாம். ஒருவரின் பேச்சோ அல்...

இன்று ஓர் இனிய தகவல் 09-01-2025

 இன்று ஓர் இனிய தகவல் 09-01-2025 * 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 உங்கள் எண்ணங்களுக்கு நீங்களே அதிபதி உங்களுக்கான நல்லதையும் கெட்டதையும் நீங்களே தீர்மானிக்கிறீர்கள்.... வெளியில் இருந்து யாரும் மற்றொருவருடைய எண்ணத்தை மாற்றவோ கட்டுப்படுத்தவும் முடியாது..... உங்களுக்கு எது தேவையோ அதைப்பற்றி மட்டுமே சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள்.... உங்களுக்கு பயன்படாத எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என நம்புங்கள்.. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏