நித்தியக்கடன் பிப்ரவரி 01 2022
☄️☁️☄️☁️☄️☁️☄️☁️☄️☁️☄️ *வாழ்க வையகம்* *வளர்க வேதாத்திரியம்* *வாழ்க வளமுடன்* *நித்தியக்கடன்* *பிப்ரவரி 01* ☄️☁️☄️☁️☄️☁️☄️☁️☄️☁️☄️ 🕸️ *இன்றைய நித்தியகடன்* 🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 🕸️ *இன்றைய சாதகம்* 🕸️ செவ்வாய்கிழமை காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம். 🕸️ *இன்றைய நற்சிந்தனை* 🕸️ மீண்டும் மீண்டும் நம்முடைய பழக்கங்கள் நம்மை கீழ்நோக்கி இழுக்கும். நம்மை திசைதிருப்பி மயக்கி தன் காரியத்தை சாதித்துக் கொள்ள, முழு ஆற்றலோடும் திறமையோடும் முயற்சி செய்யும். அப்படியானால் நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால், நாம் மேல் நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். இந்த மேல்நோக்கு பயணத்திற்கு உயிரையும், உடலையும், மனதையும் தயார்படுத்த வேண்டும். நாம் முறையாக அவைகளை தயார் படுத்தவில்லை என்றால், இந்த பயணம் துவங்குவதற்கு வாய்ப்பே இல்லை. 🕸️ *இன்றைய தற்சோதனை* 🕸️ எப்படி ஒரு ராக்கெட் மேல் நோக்கி பயணம் செய்ய அதில் தேவையான விசை இருக்க வேண்டுமோ, அது போல தான் நம்முடைய உடலுக்கும், உயிருக்கும், மனதுக்கும் போ...