Posts

சிந்தனை

 சிந்தனை 🧠 நம் வாழ்க்கையில் நம்முடைய உள்ளமும், நம் சிந்தனையும், நம் செயலும்,  நம் முயற்சியும், நம் பயிற்சியும்,  நமக்கான பாதையும்,  நம் பயணங்களும்,  நம் மீதுள்ள தன்னம்பிக்கையும், நம் உழைப்பும் 🎯 நம் இலக்கும் தெளிவாக இருக்குமானால் 🙌 நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. 📌 அதாவது திறமை என்பது பிறப்பிலேயே இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டது. ஊமையாக இருந்து அதை வீணாக்கக் கூடாது. 🏅 புகழ் என்பது நாம் வாழும் வாழ்க்கையால் வருவது. 🚫 யாருக்கும் நாம் என்றும் அடிமையாகி விடக்கூடாது. ⚠️ ஆணவம் என்பது நம் அழிவுக்கான பாதை — அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். 🧼 இறுதியாக நம் மனம் தூய்மையாக இருந்தால் 🌈 நாம் செல்லும் வழியெல்லாம் வெற்றி நிச்சயம் தான். 🙏

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

 முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்? உடல் நலத்தோடும், பொருள் வளத்தோடும், சமுதாய நட்பு நலத்தோடும், உலக இன்பங்களைத் துய்த்தது போதும் என்ற மனநிறைவோடும் வாழ்வது முழுமை நலவாழ்வு.  உடலில் தணியாத நோயோடும், மனதில் பொருள்,புகழ், அதிகாரம், புலனின்பம், நான்கும் இன்னும் வேண்டும் எனக்கே வேண்டும் என்ற பேராசையோடும் வாழ்வது துன்பவாழ்வு. அறியாமையே துன்பத்திற்குக் காரணம்.தன்னையோ கடவுளையோ அறியாமல் வாழ்பவனே துன்பத்தில் வாழ்வான்.துன்பமில்லாமல் வாழ தன்னையும் கடவுளையும் ஒன்றாக அறியும் யோகக்கலையே மனவளக்கலை (Vethathiri SKY). உடலுக்கும், உயிருக்கும், மனத்திற்கும் யோகப்பயிற்சிகள் அளித்து,தன்னையும் கடவுளையும் ஒன்றாக அறிந்தவனுக்கு,  1)தான் தனது என்ற தன்முனைப்பு (ஆணவம் -EGO)அழிந்து சம உணர்வு மலரும்.  2)அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அடிப்படைகள் கடமைகளை ஆற்றும் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும். 3)தனக்கும் பிறருக்கும் தீங்கு செய்யும்  பேராசை,சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு தீயகுணங்களும், தனக்கும் பிறருக்கும் நலம் செய்யும் ந...

மனவளக்கலை ஒரு பெட்டகம்

 மனவளக்கலை ஒரு பெட்டகம் தான் உயரவும், பிறரையும் உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன. இரண்டு வேளையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி, அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவையுண்டாகும். தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை – வினைப் பதிவுகளை மாற்றி விடலாம். ஆசைச் சீரமைப்புப் பயிற்சி செய்யுங்கள். உடல் நலம், மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதி உண்டாகும். சினம் தவிர்ப்புப் பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யும் இடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு இவை பெருகும். இனிமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். கவலை ஒழிப்புப் பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும். நான் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு, அனைத்து மறை பொருட்கள், மனம், உயிர், மெய்ப்பொருள் உணர்வு உண்டாம். இவ்வளவு பயிற்சியும், பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்க...

மனதின் தப்புகணக்கே கவலை

 மனதின் தப்புகணக்கே கவலை மனிதனின் கவலைகள் நான்கு விதமானவை என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார்கள். 1.அனுபவித்தே தீர வேண்டியது ; இந்தக் கவலைகளை அனுபவித்தே ஆக வேண்டும். வேறு வழியல்லை. கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், நேரம் வீண். தேவையற்ற மன உளைச்சல். உறவினர் மரணம், உறுப்பு இழப்பு போன்றவை. மாற்ற இயலாது. அனுபவித்தே ஆகவேண்டியது. 2.அலட்சியப்படுத்த வேண்டியது; இந்தக் கவலைகளை அலட்சியப்படுத்த வேண்டும். இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால், நேரம் வீண். மன உளைச்சல். அடுத்தவீட்டுக்கார் நம்மை கிண்டல் செய்வது. வீட்டில் பெரியவர்கள் அவ்வப்போது, நம்மை அவர்களுடன் ஒப்பிட்டு தவறாக குறை கூறுவது. 3.தள்ளிப்போட வேண்டியது; இந்தக் கவலைகள் ஒரு நாளில் சரிசெய்ய முடியாது. முயன்று கொண்டே இருக்க வேண்டும். காலம் சரியாக அமையும் போதுதான் தீரும். திருமணத்திற்கு வரன் பார்ப்பது. வேலை தேடுவது. 4.உடனே தீர்க்க வேண்டியது; இந்தக் கவலைகள் உடனே தீர்க்கப்பட வேண்டியவை. தள்ளிப்போட்டாலோ, அலட்சியம் செய்தாலோ, ஆபத்து. உடம்பில் கட்டி , வீட்டில் சொத்து பிரச்சனை. இப்போது நீங்கள்செய்ய வேண்டியது: 1.உங்களுக்கு தியானம் தெரிந்தால் தியானம் செய்துவிட...

உடல் நலத்தோடும் மனநலத்தோடும் வாழ்வதே முழுமை நலவாழ்வு

 முழுமை நலவாழ்விற்கு மனவளக்கலை (SKY)-யோகா. "உடல் நலத்தோடும் மனநலத்தோடும் வாழ்வதே முழுமை நலவாழ்வு." உடலில் நீடித்த வலியோடும் , மனதில் பொருள், புகழ்,செல்வாக்கு, புலனின்பம் நான்கும் இன்னும் வேண்டும் எனக்கே வேண்டும் என்ற ஆசையோடும் வாழ்வது உடல்  மன துன்பவாழ்வு. உடல் மன துன்பமில்லாத வாழ்வே முழுமை நலவாழ்வு.முழுமை நலவாழ்வே அமைதி வாழ்வு. முழுமை நலவாழ்விற்கு, தன்னையோ கடவுளையோ அறியும் மனப்பயிற்சியே(Meditation and introspection)யோகக்கலை.தற்காலத்திற்கேற்ப எளிமைப்படுத்தப்பட்டுள்ள யோகக் கலையே (Yoga for modern age) மனவளக்கலை (Vethathiri SKY). உடலுக்கும் உயிருக்கும் மனத்திற்கும் பயிற்சிகள் அளித்து,மெய்ப்பொருளே ஐம்பூதங்களாகி அண்டங்களாகவும், ஓரறிவு தாவரம் முதல் ஐயறிவு சீவன்களாகி, இயற்கையை இரசித்து இன்பமுற மனித சமுதாயமாகவும் வாழ்வதை அறிந்த அறிவே தன்னையோ கடவுளையோ  அறிந்த அறிவு என்பதாகும். மெய்ப்பொருளே மனித சமுதாயமாக வாழ்வதை அறிந்ததும்,  1)தன்னை இயற்கையிலிருந்தும் சமுதாயத்தில் இருந்தும் வேறாக கருதும் தான் தனது என்ற தன்முனைப்பும் (ஆணவம்), பேராசை, சினம்,கடும் பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, ...

சிவராத்திரியின் மகிமை

 சிவராத்திரியின் மகிமை என்ன? பதில் : "லூமினிபெரஸ் ஈத்தர்" ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு  பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து  தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும்.  இதனால் பல நன்மைகள் உண்டு.  இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது.   எனவேதான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அறிவியல் பூர்வமாக ஆதாரம் வேண்டும் என்றால் இங்கே நான் கொடுத்திருக்கும் சில படங்களை பார்த்துக்கொண்டே நான் சொல்வதைக் கேளுங்கள். ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது.  இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது.  மேலும் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறது. பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.  இதில் இரண்டு நீள்வட்ட பாதையில் உள்ளது.  ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை.  பூமி பெரிய நீள்வட்...

கவலையை தூர எறியுங்கள்

 'கவலையை தூர எறியுங்கள்...!'' கவலைப்படும் பழக்கம் ஒரு நோய். கவலை எனப்படுவது தொடக்கத்தில் ஒரு பழக்கமாகி, பின்னால் அதுவே ஒரு நோயாக ஆகிவிடுகிறது என்கின்றனர் உளவியல் ஆளர்கள்... அதாவது!, கவலைப்படுவது என்பது ஒருவனது இயல்பு, குணம் என்றாகி விடுகிறது. பயம், நடுக்கம், கவலை என்பதெல்லாம் பிறர் உருவாக்குவதில்லை. நாமே உருவாக்கிக் கொள்கிறோம்... நம்முடைய அறியாமையால் உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம். ஒவ்வொருவனின் தலை மீதும் இரண்டு சுமைகள். அதுவே அவனை அவதிக்கு உள்ளாக்குகின்றன... ஒன்று!, கடந்த காலத்தில் அவன் பட்ட துன்பங்களின் மறு நினைவு. மற்றொன்று எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்ற அச்ச விளைவு. வெற்றியை விரும்புவோர் இந்த இரண்டு சுமைகளையும் தூக்கி தூர எறிந்து விட்டு, வாழ்க்கையை அனுபவிக்கவும், அதை முன்னோக்கிச் செலுத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும்... உளவியல் அறிஞர் வழக்கம் போல் கணினித் துறை பணியாளர்களுக்கு மன இறுக்க மேலாண்மை குறித்துப் பாடம் எடுத்து கொண்டிருக்கிறார்... எளிமையாக அனைவரிடமும் கலந்துரையாடிக் கொண்டே மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நெகிழ்பானின் மூடியைத் திறந்து பக்கத்தில் வைத்து இ...