Posts

Showing posts from August, 2022

இன்று ஓர் இனிய தகவல் 03/08/2022 புதன்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 03/08/2022 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள்  அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹            '' ஏற்றங்களும், இறக்கங்களும் …'' .............................. வாழ்க்கை என்றால் வேதனைகளும்,. சோதனைகளும் இருக்கத் தான் செய்யும்..துன்பம் என்னும் சகதியில் சிக்கி வீழ்ந்து விடாமல் சரியானபடி வாழ்ந்து சாதித்துக் காட்ட வேண்டும்.. ஆம்..வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் .. எதிர்நீச்சல் போடத் தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்  வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரோடை என்று சொல்வதற்கு இல்லை.அதில் மேடு, பள்ளமும், சுழியும், பாறைகளும் நிறைந்து தான் இருக்கும்... வாழ்க்கைப் படகை ஓட்டிச் செல்லும் மனிதன் சுழியில் அமிழ்ந்து விடாமலும்,, பாறையில் மோதி விடாமலும் இருக்க, சரியான முறையில் துடுப்பைப் பயன்படுத்த வேண்டும். பேரறிஞர் பெர்னாட்சாவிடம் ஒருவர் வந்து, 'நான் பத்து முயற்சி செய்தால் ஒன்று தான் கை கூடுகின்றது பத்தும் பலன் தர வேண்டும் எனில் நான் என்ன செய்ய வேண்டும் '' என்று கேட்ட போது நீ நூறு முயற்சிகள் செய்.....

இன்று ஓர் இனிய தகவல் 02/08/2022 செவ்வாய்க்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 02/08/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை  சொந்தங்கள்  அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க்கையின் நிலை  மாறலாம் உணர்வுகளும் மாறிக் கொண்டே போகலாம் ஆனால் இருப்பதைக் கொண்டு வாழும் நிறைவான மனநிலை வேண்டும். எல்லாக் கல்லையுமா கருவறைக்குள் ஏற்ற முடியும், அதேபோலத் தான் வாழ்க்கையில் ஜெயிச்சவங்களும். சில கற்கள் செதுக்க முயற்சிக்கும் போதே வலி தாங்க முடியாமல் தன் தகுதியினைக் குறைத்துக் கொள்கின்றன. கடந்து வந்தப் பாதையினை திரும்பிப் பார்ப்பது மிகவும்  நல்லது. அப்போது தானே தெரியும் யார் கை கொடுத்தது  யார் காலை வாரி விட்டது என்பது. பார்த்து பழகினால் வெற்றி நிச்சயம். இறைவா இன்றைய நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி. இன்றைய பொழுது அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்.                                                                     ...