முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

 முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?


உடல் நலத்தோடும், பொருள் வளத்தோடும், சமுதாய நட்பு நலத்தோடும், உலக இன்பங்களைத் துய்த்தது போதும் என்ற மனநிறைவோடும் வாழ்வது முழுமை நலவாழ்வு.


 உடலில் தணியாத நோயோடும், மனதில் பொருள்,புகழ், அதிகாரம், புலனின்பம், நான்கும் இன்னும் வேண்டும் எனக்கே வேண்டும் என்ற பேராசையோடும் வாழ்வது துன்பவாழ்வு.


அறியாமையே துன்பத்திற்குக் காரணம்.தன்னையோ கடவுளையோ அறியாமல் வாழ்பவனே துன்பத்தில் வாழ்வான்.துன்பமில்லாமல் வாழ தன்னையும் கடவுளையும் ஒன்றாக அறியும் யோகக்கலையே மனவளக்கலை (Vethathiri SKY).


உடலுக்கும், உயிருக்கும், மனத்திற்கும் யோகப்பயிற்சிகள் அளித்து,தன்னையும் கடவுளையும் ஒன்றாக அறிந்தவனுக்கு,

 1)தான் தனது என்ற தன்முனைப்பு (ஆணவம் -EGO)அழிந்து சம உணர்வு மலரும். 


2)அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அடிப்படைகள் கடமைகளை ஆற்றும் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும்.


3)தனக்கும் பிறருக்கும் தீங்கு செய்யும் 

பேராசை,சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு தீயகுணங்களும், தனக்கும் பிறருக்கும் நலம் செய்யும் நிறைமனம், பொறுமை, ஈகை, கற்பு, சம உணர்வு, மன்னிப்பு ஆகிய ஆறு நற்குணங்களாக மாற்றம் பெற்று விடும்.


4)இயற்கை வளங்களை வாழ்க்கை அனுபோகப் பொருட்களாக மாற்றி இயற்கை இன்பங்களைத் துய்த்து வாழ்வதே மனித வாழ்வின் நோக்கம் என்பதும் விளங்கிவிடும்.


5)ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய இயற்கைநீதியை மதித்து,

தனக்கும் பிறருக்கும் துன்பம் தராத அறவழியில் பொருள் ஈட்டி, தனக்கும் பிறருக்கும் துன்பம் தராத அறவழியில் இயற்கை இன்பங்களைத் துய்த்து, எல்லோரும் இன்புற்று வாழ பொருள் இல்லாதவர்களுக்கு பொருளையும், அருள் இல்லாதவர்களுக்கு அறிவையும் ஈந்து உதவி, உடல் நலத்தோடும், பொருள் வளத்தோடும், நட்பு நலத்தோடும், உலக இன்பங்களைத் துய்த்து மனநிறைவோடும் முழுமை நலவாழ்க்கையை வாழ்வார்.

வாழ்க வேதாத்திரியம். 

வாழ்க வளமுடன் 

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

சிந்தனை