மனதின் தப்புகணக்கே கவலை

 மனதின் தப்புகணக்கே கவலை

மனிதனின் கவலைகள் நான்கு விதமானவை என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார்கள்.


1.அனுபவித்தே தீர வேண்டியது ; இந்தக் கவலைகளை அனுபவித்தே ஆக வேண்டும். வேறு வழியல்லை. கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், நேரம் வீண். தேவையற்ற மன உளைச்சல். உறவினர் மரணம், உறுப்பு இழப்பு போன்றவை. மாற்ற இயலாது. அனுபவித்தே ஆகவேண்டியது.


2.அலட்சியப்படுத்த வேண்டியது; இந்தக் கவலைகளை அலட்சியப்படுத்த வேண்டும். இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால், நேரம் வீண். மன உளைச்சல். அடுத்தவீட்டுக்கார் நம்மை கிண்டல் செய்வது. வீட்டில் பெரியவர்கள் அவ்வப்போது, நம்மை அவர்களுடன் ஒப்பிட்டு தவறாக குறை கூறுவது.


3.தள்ளிப்போட வேண்டியது; இந்தக் கவலைகள் ஒரு நாளில் சரிசெய்ய முடியாது. முயன்று கொண்டே இருக்க வேண்டும். காலம் சரியாக அமையும் போதுதான் தீரும். திருமணத்திற்கு வரன் பார்ப்பது. வேலை தேடுவது.


4.உடனே தீர்க்க வேண்டியது; இந்தக் கவலைகள் உடனே தீர்க்கப்பட வேண்டியவை. தள்ளிப்போட்டாலோ, அலட்சியம் செய்தாலோ, ஆபத்து. உடம்பில் கட்டி , வீட்டில் சொத்து பிரச்சனை.


இப்போது நீங்கள்செய்ய வேண்டியது:


1.உங்களுக்கு தியானம் தெரிந்தால் தியானம் செய்துவிட்டு அமைதியாக அமருங்கள். தியானம் தெரியாவிட்டால் சிறிது நேரம் கண்ணை மூடிக கொண்டு உங்களது மூச்சை கவனியுங்கள். அமைதியாக சில நேரம் அமருங்கள். இப்போது மனம் ஒரு சன்னமான நிலைக்கு வரும்.


2.இப்போது உங்களது கவலைகளைப் பட்டியலிடுங்கள். பட்டியல் இட்ட பிறகு ஒவ்வொரு கவலையும் மேற்குறிப்பிட்ட நான்கு வகைகளுக்குள் ஒன்றில் பொருத்துங்கள்.


3.உடனே தீர்க்க வேண்டிய கவலைக்கு மட்டும் திட்டம் வகுத்து விரைவாக செய்து முடியுங்கள்.


4.மற்ற கவலைகளை அலட்சியப்படுத்துங்கள் அல்லது தொடர்ந்து முயல்வது என்று எண்ணி கவலையைத் தள்ளிப் போடுங்கள் அல்லது அனுபவித்தே தீர வேண்டியது என்று அதை ஏற்றுக்கொண்டு விடுங்கள்.


இப்போது மனம் லேசாக இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். எதையும் என்னால் செய்ய முடியும் என்கின்ற உத்வேகம் பிறந்துவிடும். தன்னம்பிக்கை பிறக்கும்.

நீங்கள் கவலைகளை ஒழித்து மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.


பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை