உடல் நலத்தோடும் மனநலத்தோடும் வாழ்வதே முழுமை நலவாழ்வு

 முழுமை நலவாழ்விற்கு மனவளக்கலை (SKY)-யோகா.


"உடல் நலத்தோடும் மனநலத்தோடும் வாழ்வதே முழுமை நலவாழ்வு."


உடலில் நீடித்த வலியோடும் , மனதில் பொருள், புகழ்,செல்வாக்கு, புலனின்பம் நான்கும் இன்னும் வேண்டும் எனக்கே வேண்டும் என்ற ஆசையோடும் வாழ்வது உடல்  மன துன்பவாழ்வு. உடல் மன துன்பமில்லாத வாழ்வே முழுமை நலவாழ்வு.முழுமை நலவாழ்வே அமைதி வாழ்வு.


முழுமை நலவாழ்விற்கு, தன்னையோ கடவுளையோ அறியும் மனப்பயிற்சியே(Meditation and introspection)யோகக்கலை.தற்காலத்திற்கேற்ப எளிமைப்படுத்தப்பட்டுள்ள யோகக் கலையே (Yoga for modern age) மனவளக்கலை (Vethathiri SKY).


உடலுக்கும் உயிருக்கும் மனத்திற்கும் பயிற்சிகள் அளித்து,மெய்ப்பொருளே ஐம்பூதங்களாகி அண்டங்களாகவும், ஓரறிவு தாவரம் முதல் ஐயறிவு சீவன்களாகி, இயற்கையை இரசித்து இன்பமுற மனித சமுதாயமாகவும் வாழ்வதை அறிந்த அறிவே தன்னையோ கடவுளையோ  அறிந்த அறிவு என்பதாகும்.


மெய்ப்பொருளே மனித சமுதாயமாக வாழ்வதை அறிந்ததும், 

1)தன்னை இயற்கையிலிருந்தும் சமுதாயத்தில் இருந்தும் வேறாக கருதும் தான் தனது என்ற தன்முனைப்பும் (ஆணவம்), பேராசை, சினம்,கடும் பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய   தீயகுணங்களும், சம உணர்வு, நிறைமனம், பொறுமை,ஈகை,கற்பு,சம உணர்வு , மன்னிப்பு ஆகிய  நற்குணங்களாக மாற்றம் பெற்று விடும்.


2)அனைத்துயிரும்  ஒன்றென்று அறிந்த அடிப்படையில், எவ்வுயிருக்கும் துன்பம் தராமலும் துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தும் வாழும் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும்.

ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய அறநெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வது இயல்பாகி விடும்.


3)சமுதாய நலனை முன்வைத்து அறவழியில் பொருள் ஈட்டிப் பகிர்ந்து,ஆடம்பர வீண் செலவுகளைத் தவிர்த்தும்,தேவைக்கு மேல் சொத்து சேர்க்காமலும் போர் பகை அச்சமின்றி எல்லோரும் பொருள் வளத்தோடு வாழலாம்.


3) பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் நான்கிற்கும் பேராசைப்படாமல் உணவு, உழைப்பு, உறக்கம், பாலுறவு, எண்ணம் ஆகிய ஐந்தில் அளவு முறை காத்தும், பிறர் துன்பம் போக்கும் புண்ணியம் செய்தும் உடல் நலத்தோடு மனிதன் வாழ்வான்.


4)பிறரை தனக்கு சமமாக அறிந்த அறிவுநிலையில்,எல்லோருடனும் இன்முகத்தோடு இன்சொல் பேசிப் பழகி,ஈதல் இசைபட வாழ்தல் என்ற அறநெறிகளைக் கடைப்பிடித்து, யாருக்கும் துன்பம் தராமலும் துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தும் நட்பு நலத்தோடு மனிதன் வாழ்வான். 


5) உலக சமுதாயமாக உலக இன்பங்களைத் துய்த்து எந்நாளும் வாழ்வது நானே என்பதை அறிந்து  மனநிறைவு (அமைதி)பெற்று மனிதன் இறைநிலையை (பிறவாத நிலையை)அடைவான்.


"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை."

 "அறிந்தது சிவம் மலர்வது அன்பு."    --திருமூலர்.

கடவுளை அறிந்தவனுக்குக்  கவலையில்லை.

"அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல."

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்."

     --திருவள்ளுவர்.


உடல் நலத்தோடும், பொருள் வளத்தோடும், நட்பு நலத்தோடும், உலக இன்பங்களைத் துய்த்து மனநிறைவாடும்  வாழ்பவரே வாழ்வாங்கு வாழ்ந்து இறைநிலையை அடைவார்.

வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன் 


தொகுத்தவர்:

முதுநிலை ஞானாசிரியர் அருள்நிதி.

வேதசுப்பையா.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை