இன்று ஓர் இனிய தகவல் 08/07/2021 வியாழக்கிழமை

 வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று உங்களுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடிய தகுதி எந்த மனிதருக்கு உண்டு.  வாழ்க்கை என்பது அவ்வளவு இழிவானது அல்ல. வாழ்க்கை என்பது அற்புதமானது நீங்கள் அனுபவித்து கடந்து செல்ல வேண்டும். கடந்து செல்லும் பாதையை ஏற்கனவே கடந்தவர்கள் அறிவுரைகளைக் கேட்டு கொள்ளலாம் தவிர பின்பற்றக்கூடாது நாம் உணரவேண்டும் உள்வாங்கி கடக்க வேண்டும்.


வாழ்க்கை என்பது ஒரு வட்டம் அல்ல அது பரந்து விரிந்தது. வட்டத்திற்குள் அடங்காது. அது (இறையின் மறைப்பு) ஒவ்வொன்றும் அனுபவிக்க வேண்டியது.


எத்தனை மனிதர்கள் எறும்புகளின் சத்தத்தை கேட்டு இருப்பார்கள்.  எத்தனை மனிதர்கள் தூக்கனாங்குருவியிடம் வீடு கட்டும் முறையை அறிந்திருப்பார்கள். எத்தனை மனிதர்கள் தேனீக்களிடம் இருந்து பொறுமையை கற்று இருப்பார்கள்.


  பூமி என்பது ஒன்று ஆனால் அதில் வாழக்கூடிய மனிதர்களின் சிந்தனை வேறு. உங்களது சிந்தனைதான் மாறவேண்டும். வாழ்க்கை என்பது இப்படி நான் வாழ்ந்து விட்டேன் என்று பெருமை பீற்றிக் கொள்வது அல்ல.


 வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள் அனுபவித்து வாழுங்கள் உங்களது வாழ்க்கையை உங்களால் மட்டும் தான் கற்றுக் கொள்ள முடியும். உங்களால் மட்டும் தான் உணர முடியும். உங்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்க முடியாது. 


 வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்    செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை