இன்று ஓர் இனிய தகவல் 18/07/2021 ஞாயிற்றுக்கிழமை

 உங்கள் மனதைப் போட்டுக் குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி விடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி விட்டு வேலையைப் பாருங்கள்.


விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப்போகும் அதிசயங்களுக்கு நன்றி, என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும்.


அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளைப் பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்.


நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்.


உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்து விடும்...


உங்களைச் சுற்றி எதிராக நடப்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.


உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.


பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.


நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப் போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கும் நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே இருங்கள். (சத்தியமாக சக்தி வாய்ந்த செயல்முறை]


உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்து விடும்...


உங்கள் நேர்மறையான சக்தி இந்தப் பிரபஞ்சத்தைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்.


விதைத்தவன் தூங்கி விடுவான் ... விதை தூங்காது ... எண்ணியவன் தூங்கி விடுவான் ... எண்ணம் தூங்காது ... எண்ணம் போல் வாழ்க்கை எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்


சிந்தித்து செயலாற்றுங்கள்.

🌴🎋🌴🎋🌴🎋🌴              வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே** 

                            வெற்றி நிச்சயம்*                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை