இன்று ஓர் இனிய தகவல் 27/06/2021 ஞாயிற்றுக்கிழமை

 மயிலைப் போல காகம் அழகு இல்லை. .!!ஆனால் படையல் என்னவோ காகத்திற்குத் தான் வைக்கிறார்கள்....!!


எனவே நீங்கள் நீங்களாகவே இருங்கள். யாருக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்..


பிறந்த இடம் கடலாய் இருந்தாலும் புகுந்த வீட்டில் மீன்தொட்டியிலும் வாழப் பழகிக் கொள்பவள் தான் பெண்!


யாரும் யாருக்காவும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தன் மனசாட்சிக்கு உண்மையாக இருந்தாலே போதும்..


நீங்கள் வெற்றி பெற்றால் சாதனையாளன்...!!பெறாவிட்டால் பிறருக்குப் போட்டியாளனே தவிர தோல்வியாளன் இல்லையே...


கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு. ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள் இல்லை.


உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ள உளி தேவையில்லை. பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும்.


நான் எனும் ஆணவம் கொண்டவன் வெற்றி நிலைக்காது. வேஷம் கலைந்தால் விஷம் தான் தீர்வு....


நாம் என்று நிற்பவரை வெற்றி என்றும் சூழ்ந்திருக்கும். பாசம் கொண்ட நட்புகள் தாங்கி நிற்கும்.


தலையும், வாலும் ஒன்றுபட்டு செயல்படுங்கள். இரு கரம் கொண்டு இணைந்திருங்கள்....

 வெற்றி நிச்சயம் 

🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம்.

வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை