இன்று ஓர் இனிய தகவல் 05/09/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 05/09/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
கல் உப்பு போன்ற கடின வார்த்தைகளால் நம்மைத் திருத்துபவர் தான் உண்மையான நண்பர். இனிய சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மைப் புகழ்பவர் நயவஞ்சகர். உலகின் தலைசிறந்த பொய் எது என்று தெரியுமா????நல்லவருக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்பது தான்.

எந்த ஒரு பூட்டையும் சாவி இல்லாமல் உருவாக்குவதில்லை.

அதேபோல் நமக்கு வரக்கூடிய எல்லா பிரச்சினைகளின் தீர்வு அந்தப் பிரச்சனைகளுக்குள்ளேயே இருக்கிறது.

பொறுமையாக யோசித்துப் பாருங்கள். யாருடைய உதவியையும் நாடாதீர்கள்.

வெற்றி என்பது வளர்ந்த மரம் போல் விதையைத் தூவிய மறுகணமே மரத்தை எதிர்பார்க்காதீர்கள்
                           உங்கள் பார்வைகளை அழகு படுத்துங்கள். உங்கள் உள்ளத்தை தூய்மை படுத்துங்கள்...

பேச்சில் நேர்மையாக இருங்கள். நடக்கும் போது மென்மையாக நடந்து கொள்ளுங்கள்...

உங்கள் விருப்பத்திற்கு எதிராக எது நடந்தாலும் அமைதியை மட்டும் கடைபிடியுங்கள்...!

ஒரு கட்டத்தில் நல்ல திருப்பம் ஏற்படும்..!அதுவே உங்களுக்குப் பயனுள்ளதாக அமையும்...!

உரிமை உண்டு என எண்ணினாலும் நமக்கு மதிப்பு இல்லையே என ஒரு சில இடங்களில் ஒதுங்கியே இருக்க வேண்டியுள்ளது..

இறைவழி கொண்டு ஏனைய தர்மத்தை செய்து இயற்கையை விட்டு மாறாமல் மந்திரத்தை, கூறத் துவங்குங்கள். உங்கள் மனமானது உள்ளே திரும்பத் துவங்கும்...!!!

தெரியாமல் செய்த தவறாயினும் அறியாமல் செய்த தவறாயினும் ஒரு நாள் நிச்சயம் திரும்பி உங்களை வந்தடையும்..!

சாபத்தைக் கூட தீர்த்து விடலாம், கோபத்தை விட்டால் ஆபத்து உங்களுக்குத் தான்..

பாதை மாறி செல்லும் ஆற்றின் ஓட்டத்தை போல, திருப்பிய பக்கம் எல்லாம் திரும்பாமல் பாவத்தை செய்ய முன் வராதீர்.

பொறுமையோடு நீங்கள் நீங்களாக இருங்கள்.வெற்றி நிச்சயம்.

 *வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.* 
          👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
                                                        🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை