இன்று ஓர் இனிய தகவல் 14/09/2021 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 14/09/2021 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 *அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா?* 

அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரை நிகழ்த்தும் போது, அவரை மட்டம் தட்டும் நோக்கில் எதிர்தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து,

ஆப்ரஹாம் ... ...உங்கள் தந்தை தைத்துக் கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது என்றாராம் ....அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம்,

"நண்பரே என் தந்தை இறந்து பல வருடங்கள் ஆகி விட்டது, இருப்பினும் அவர் தைத்துக் கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது 

இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது எற்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன்

எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... ... !!!
 *தன்னம்பிக்கை விடாமுயற்சி* இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது. பதவியில் இருக்கும் போதும் அவமானப்படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலித்தனமாக பணிவோடு பதில் அளித்தே அவமானப்படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன். இந்தப் பக்குவமான மனதாலும் விடாமுயற்சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி அடிமைத்தனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

இதைத் தான் கண்ணதாசனும் " *நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்"* என்றார். இன்றும் பல உயிர்கள் வணங்குகின்றன லிங்கனை....நன்றி.வாழ்க வளமுடன். 
                          *வெற்றி‌ நிச்சயம்* 
          👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
                                                        🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை