இன்று ஓர் இனிய தகவல் 28/09/2021 செவ்வாய்க்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 28/09/2021 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
அழகு என்பது அழகான முகத்தைக் கொண்டிருப்பது அல்ல. இது ஒரு அழகான மனம், அழகான இதயம் மற்றும் மிக முக்கியமாக, ஒரு அழகான ஆன்மாவைப் பற்றியது.
எடுத்த செயலில் உறுதியாக இருப்பது அதற்காக உழைப்பது அதற்குரிய ஊக்கத்தை வளர்த்துக் கொள்வது இவற்றிற்கு மேலாக தன்னம்பிக்கையுடன் செயல்படுவது இவையே வெற்றியை அடைவதற்கான வழிகள்.
இரண்டு வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரே வார்த்தையில் சொல்ல முடிந்தால் அது தான் விலைமதிக்க முடியாத திறமை.
அனுபவத்தின் குரலைக் கேளுங்கள்.உங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எண்ணங்களும் செயல்களும் தான் ஒரு மனிதனின் குணமாகவும் பழக்கமாகவும் மாறும். எனவே எண்ணங்களிலும் செயல்களிலும் கவனமாக இருங்கள்.
புயலில் சிக்கி சிதறுண்டுப் போவதைப் போல தீமைகளை அழியுங்கள்.
நாணயத்தின் இரு பக்கம் போல் தான் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும். எழுமாறாகச் சுழலும் போது இன்பமும் வரலாம் துன்பமும் வரலாம். எதுவென்றாலும் ஏற்றுக் கொள்ளும் மனமே நம்மிடம் வேண்டும்...
தலையில் கணத்தை வைத்துக் கொண்டு வாழாதீங்க. பிறகு தலை நிமிர முடியாத தலைக்கணமாக மாறலாம்...!
மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை. பயம் என்னும் பெயரில் மனத்துக்குள்ளையே இருக்கிறது.
உண்மை பேசினால் வரும் இழப்பை விட , பொய் பேசி வரக்கூடிய அவப்பெயர் மிக வேதனையானது , கொடுமையானது..
அற்புதங்கள், நம்பிக்கையை உருவாக்குவதில்லை.நம்பிக்கை தான் அற்புதங்களை உருவாக்குகின்றன...
கடவுளைத் திருப்திபடுத்துங்கள் வாழ்க்கை அழகாகும்.
பெற்றோரைத் திருப்திப்படுத்துங்கள் குடும்பம் மேலோங்கும்.
மனைவியை/கணவனை திருப்திப்படுத்துங்கள் மகிழ்ச்சி தழைத்தோங்கும்.
நண்பனை திருப்திப்படுத்துங்கள் தொடர்புகள் அதிகமாகும்.
உங்களை மகிழ்ச்சியாக நீங்கள் வைத்திருங்கள். அனைவரையும் திருப்திப்படுத்த முடியும்...!! நன்றி.
வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்.
👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment