இன்று ஓர் இனிய தகவல் 02/12/2021 வியாழக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 02/12/2021 வியாழக்கிழமை🦋🦋🦋🦋🦋🦋🦋 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
*அன்பை வாரி வழங்குங்கள்..!!*
*முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்த போது, பெர்லின் நகரத்தை கிழக்காகவும், மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.*
*ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டு வந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.*
*(அவ்வளவு குரோதம்.!)*
*மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும், அதே மாதிரி செய்திருக்கலாம்.*
*ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை.*
*மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டு வந்து, மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்து விட்டு போனார்கள்.*
*மேலும், அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள்...*
*"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை தான் கொடுப்பார்கள்"*
*(“EACH GIVES WHAT HE HAS")*
*எவ்வளவு நிதர்சனமான உண்மை..!*
*உங்களிடம் இருப்பதை தான் உங்களால் கொடுக்க முடியும்..!!*
*உங்களுக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது ?*
*அன்பா - பகையா ?*
*அமைதியா - வன்முறையா ?*
*வாழ்வா - சாவா ?*
*உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா ?*
*இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன ?*
*"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை தான் கொடுப்பார்கள்"*
*அன்பை வாரி வழங்குங்கள்..!!*
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment