இன்று ஓர் இனிய தகவல் 09/12/2021 வியாழக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 09/12/2021 வியாழக்கிழமை🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
*மனோசக்திக்கு எல்லையே கிடையாது* .* ..
இந்த சக்தி வங்கியில் சேமித்து வைத்துள்ள பணத்தைப் போன்றது. வங்கிப் பணமாவது எடுக்க எடுக்க குறையும். நீங்கள் எவ்வளவு மனோசக்தியைப் பயன்படுத்தினாலும் திரும்ப திரும்ப அது உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். உங்களிடம் நீங்கள் நம்பிக்கை வைத்தால் உங்களுடைய மனோ சக்தியிடமும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.
பிரான்ஸ் தேசத்தில் ஒரு ஞானி இருந்தார் அவர் தன்னுடைய சீடர்களுக்கு திரும்பத்திரும்ப ஒன்றைச் சொல்லிக் கொண்டே இருப்பாராம்.
"உங்களுக்கு களைப்பு ஏற்படுகிறது என்றால் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருங்கள்" என்பாராம்.
சீடர்களுக்கு இது வேடிக்கையாகப்பட்டது.
சீடர்களில் ஒருவர் ஒருநாள் உடல் முடியாமல் களைத்துப் போய் படுத்துவிட்டார். படுத்தவுடன் குருசொன்ன வாக்கியம் நினைவுக்கு வந்தது. உடனே களைப்பைப் பொருட்படுத்தாமல் எழுந்து உட்கார்ந்தார். பின்னர் தோட்டத்தை நோக்கி நடக்கலானார். உற்சாகமாக அவர் நடக்க ஆரம்பிக்கவே இயற்கையிலிருந்து சக்தி தன்னுள் நுழைவதை உணர்ந்தார். சற்றநேரத்தில களைப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டதாம். அந்த சீடர் சொல்கிறார் களைப்பு உடலில் இல்லை. மனதில்தான் இருக்கிறது. மனதை உற்சாகப் படுத்திக் கொண்டால் களைப்பு தானாகவே மறைந்துவிடுகிறது.
நாம் நம்பிக்கை வைக்கும்பொழுது, வேலை செய்வதற்குத் தேவையான பலத்தை நம்முடைய மனோசக்தி நமக்கு வழங்குகிறது. *நாம் நம்மிடம் வைக்கின்ற நம்பிக்கைதான்* நம்முடைய வாழ்க்கையை உருவாக்குகின்ற மிகப்பெரிய சக்தி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. *நம்மீது நாம் நம்பிக்கை வைக்கிறபோது நம்மிடம் ஊற்றெடுக்கின்ற சக்தி நமக்கே பிரமிப்பு ஊட்டுவதாக அமையும்.*
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment