இன்று ஓர் இனிய தகவல் 10/12/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 10/12/2021 வெள்ளிக்கிழமை🐘🐘🐘🐘🐘🐘🐘 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
'' *தடைகளைத் தாண்டி.* .''.....................................
மன எழுச்சி, மிகுந்த மதிநுட்பமும், உடல் சக்தியும் தான் எப்பொழுதும் வெற்றியை நல்கும். 

வாழ்க்கைப் பயணமே தடைகள் நிறைந்தது ஆகும்,உடல் திறமும் நெஞ்சுரமும் நிறைந்தவர்களே தடைகளைத் தாண்ட முடியும். 

பயணத்தில் மகிழ்ச்சியையும் சுவைகளையும் எய்திட முடியும்.

நீண்ட காலத் திட்டம் போடும் போது, நமக்கு முன் உள்ள சின்னச் , சின்னத் தடங்களைப் பொருட்படுத்தக் கூடாது. அவைகளைப் புறம் தள்ளி விட வேண்டும். 

எல்லாவற்றையும் போட்டுக் குழப்பினால் நாம் எண்ணிய செயலை முடிக்க இயலாமல் போகும்...

கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. கிராமவாசி ஒருவர் மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.

பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிகச் சிரமம். இதனால் அந்த கிராமவாசி இரவு வேளையில கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். 

கிராமத்தின் எல்லையில் அவர் நின்று விட்டார். அவர் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரம் தான் தெரிந்தது. 

அதற்குப் பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவருக்கு ஒரு சந்தேகம். இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ? 

இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தார்.

அப்போது அங்கு ஒரு வயதானவர் அதை விட சிறிய விளக்குடன் அங்கு வந்தார். அவரும் மலையேற வந்து உள்ளதாகக் கூறினார்.. 

கிராமவாசி அவரிடம் தன் சந்தேகத்தைக் கேட்ட போது,

அந்த வயதானவர் சிரித்தப்படி,

''விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில்
முன்னேறு'', பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்குத் தெரியும். 

அவ்வாறே எத்தனை கிலோ மீட்டர் வேண்டும் ஆனாலும் நீ மலை ஏறிச் செல்லலாம்." என்றார்...

ஆம்.,நண்பர்களே..,

தடைகளைத் தாண்டினால் சரித்திரம் படைக்க முடியும்..
உங்கள் முயற்சியில் இடைபடும் தடைகளைத் 
தொடர்ந்து தாண்டினால் தான் வெற்றி நிச்சயம்..........
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை