இன்று ஓர் இனிய தகவல் 24/12/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 24/12/2021 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🪴மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
            ஞானி ஹசீனுக்கு அழகிய மகன் ஒருவன் இருந்தான். 

புத்தியும் தன்னடக்கமும் கொண்ட அவன் மீது ஊர்மக்கள் மிகுந்த பிரியம் வைத்திருந்தனர். 

இருபது வயதான நிலையில் ஒரு நாள் திடீரென்று அவன் இறந்துவிட்டான். 

மொத்த ஊரும் ஹசீனின் வீட்டுக்கு முன்னர் கூடி அழுதது.

ஹசீன் தன் மகனின் சடலத்தின் முன்னர் அமைதியாக அமர்ந்திருந்தார். 

ஒரு துளிகூட அவரிடமிருந்து கண்ணீர் வரவில்லை. 

ஒருகட்டத்தில் சிரிக்கத் தொடங்கிவிட்டார்.

பிரியமான மகனின் பிரிவு அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதாக ஊர்மக்கள் நினைத்தனர்.

 “என்ன ஆகிவிட்டது உங்களுக்கு? பைத்தியமா?” என்று கேட்டனர்.

“அதெல்லாம் இல்லை. 

இவனது மரணத்தை உணர்ந்தவுடன் மிகுந்த கவலையுற்றேன். 

சுயபரிதாபத்தையும் உணர்ந்தேன். 

ஆனால் திடீரென்று ஒன்று எனது நினைவுக்கு வந்தது. 

அவன் பிறக்காத போது நான் சந்தோஷமாக இருந்த நாட்கள் அவை. 

அவன் இல்லாத போது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தான் இருந்தேன். 

அப்போது அவனது இழப்பையே நான் உணரவில்லையல்லவா? 

இப்போது அவன் மீண்டும் இல்லாமல் போய்விட்டான். 

நான் மீண்டும் அதே தனியனாகி விட்டேன்.

 ஒரு கனவு முடிந்துவிட்டது.

 யார் எனக்கு அவனை அளித்தாரோ அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார். 
அது தப்பென்று நான் எப்படிச் சொல்லமுடியும்?”

எனவே அளிக்கப்பட்டவற்றுக்கு நன்றியை உணருங்கள்.

 கிடைக்கிற சந்தோஷத்துக்கு நன்றியைச் சொல்லுங்கள்.

 ஆனால் அது நாளைக்கும் கிடைக்கும், கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள்
*#ஓஷோ* வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை