இன்று ஓர் இனிய தகவல் 27/12/2021 திங்கட்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 27/12/2021 திங்கட்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
*அந்தந்த நொடியை அழகாய் வாழ்ந்து விட எல்லோருக்கும் வாய்ப்புகள் அமைவதில்லை.*
*சிலர் மட்டும் அப்படி அமையும் வாய்ப்புகளைத் தவறவிடுவதில்லை.*
*பொறுமை என்பது அவசியமான ஒன்று.*
*விதைத்தவுடன் எவராலும் அறுவடை செய்து விட முடியாது.*
*எங்கேயும் எப்போதும் அன்பை உணர்தல் ஆகப் பெரும் மகிழ்ச்சி... அன்பிற்கு இனமில்லை.*
*அறிவுரைகள் எளிதில் கிட்டிவிடும்... அனுபவங்கள் அவமானங்களால் தான் வரும்.*
*கொண்டாட்டங்களின் குவியல் தான் இந்த வாழ்க்கை... எதை எடுக்கிறோம்... எதைக் கொடுக்கிறோம்.*
*எப்படிக் கொண்டாடுகிறோம் என்பது மட்டுமே மாறுபடுகிறது.*
*"திறமை" என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது. அடக்கத்துடன் இருங்கள்.*
*"புகழ்" என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது... நன்றியுடன் இருங்கள்.*
*"அகம்பாவம்" என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொண்டது... எச்சரிக்கையுடன் இருங்கள்.*
*நீங்கள் உதிர்க்கும் வார்த்தையில்... உதிரம் இல்லை. ஆனால் உயிர் உண்டு.*
*தவறுகளுக்கு சூழ்நிலை காரணமாக இருக்கலாம். திருத்திக் கொள்ளாததற்கு சூழ்நிலை காரணமாகாது.*
*ஏமாறுவதற்கும்... ஏமாற்றுவதற்கும்.. சிறு வித்தியாசம்... ஒருவரின் அலட்சியம்... மற்றவருக்கு அவசியம்.*
*கற்றுக் கொள்வதை விட... காயம்படுவதே அதிகம் இங்கே.*
*உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள், என்றும் நினைவில் வையுங்கள்.உதவாதவர்கள் உங்கள் வெற்றிக்குரியவர்கள், என்றும் மறந்து விடாதீர்.*
**நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்* வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment