நித்தியக்கடன் பிப்ரவரி 01 2022
☄️☁️☄️☁️☄️☁️☄️☁️☄️☁️☄️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 01*
☄️☁️☄️☁️☄️☁️☄️☁️☄️☁️☄️
🕸️ *இன்றைய நித்தியகடன்*
🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🕸️ *இன்றைய சாதகம்*
🕸️ செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🕸️ *இன்றைய நற்சிந்தனை*
🕸️ மீண்டும் மீண்டும் நம்முடைய பழக்கங்கள் நம்மை கீழ்நோக்கி இழுக்கும். நம்மை திசைதிருப்பி மயக்கி தன் காரியத்தை சாதித்துக் கொள்ள, முழு ஆற்றலோடும் திறமையோடும் முயற்சி செய்யும். அப்படியானால் நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால், நாம் மேல் நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். இந்த மேல்நோக்கு பயணத்திற்கு உயிரையும், உடலையும், மனதையும் தயார்படுத்த வேண்டும். நாம் முறையாக அவைகளை தயார் படுத்தவில்லை என்றால், இந்த பயணம் துவங்குவதற்கு வாய்ப்பே இல்லை.
🕸️ *இன்றைய தற்சோதனை*
🕸️ எப்படி ஒரு ராக்கெட் மேல் நோக்கி பயணம் செய்ய அதில் தேவையான விசை இருக்க வேண்டுமோ, அது போல தான் நம்முடைய உடலுக்கும், உயிருக்கும், மனதுக்கும் போதிய ஆற்றல் விசை தேவைகளை உற்பத்தி செய்வதுதான், மனவளக்கலை பயிற்சி முறைகள் நான்கும் ஆகும். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இந்த நான்கின் வழியாக ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்த ஆற்றலை முறையாக நாம் பயன்படுத்தி பயன் காணவேண்டும்.
🕸️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🕸️ இக்காலகட்டத்தில் மிகுந்த கவனத்தோடு இருந்து, நாம்முடைய ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் ஆற்றல் அதிகரிக்கும் போது, நமக்கு புலன் வயப்பட்ட பழைய பழக்கங்கள் மீண்டும் தொற்றுநோய் போல தொற்றிக்கொள்ள, வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. ஆக தெளிவோடு நம்மை பழைய பழக்கங்களுக்குள் சிக்க வைத்துக் கொள்ளாமல், நாம் தான் நம்மை பாதுகாத்துக் கொண்டு இந்த மேல்நோக்கு பயணத்தை, வெற்றிகரமாக துவங்கி நிறைவு செய்ய வேண்டும். வாழ்க வளமுடன்..
🕸️ *இன்றைய மூலிகை*
🕸️ *வேப்பிலை* தேவையான பொருட்கள், வேப்பிலை 5, சின்ன வெங்காயம் 1, மிளகு 3, சீரகம் 10, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள். (ஒரு நபருக்கான அளவு) இவைகளை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 20 நிமிடம் வாயில் இருக்கும்படி மென்று உமிழ்நீரை சிறிதுசிறிதாக விழுங்கவும்.
🕸️ நன்மைகள்:- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் பலம் பெறுகிறது, ரத்தம் தூய்மையாகிறது, படிப்படியாக உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகரிக்கிறது.
🕸️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🕸️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🕸️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🕸️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment