இன்று ஓர் இனிய தகவல் 19/1/2022 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 19/1/2022 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
             *உங்களை வளர்த்துக் கொள்ள உங்களால் மட்டுமே முடியும்.*    
                        
*வெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க தயாரானால், அதற்கான வழிகள் நம் முன்னே பிரகாசமாக தெரியும்.*

*விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் வெற்றி நம்மை பின்தொடரும்.*

*நேர்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தான் வெற்றிக்கு முக்கியம்.*

*இவை அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும் என விவேகானந்தர் கூறினார்.*

*எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என இல்லாமல் இப்படித் தான் வாழ வேண்டும் என்கிற கொள்கையில் வாழ்நாள் எல்லாம் ஒவ்வொரு நொடியையும் செலவிட வேண்டும்.*

*லட்சியத்தை நம்மால் அடைய முடியும் என்று நம்புவதே தன்னம்பிக்கை.*

*எதை இழந்தாலும் இழக்கலாம். ஆனால் தன்னம்பிக்கையை என்றும் இழக்க கூடாது.*

*படிக்க, படிக்க மனம் விரிவடையும்.திறந்த மனம் வெற்றியின் விளைநிலம். பள்ளம் தான் மேட்டினை நிர்ணயிக்கிறது.*

 *குள்ளம் தான் உயர்வினை வடிவமைக்கிறது. இல்லாதது தான் இருப்பதை காட்டுகிறது. தவறு செய்வது தவறல்ல. திருத்திக்கொள்ள மறுப்பது தான் தவறு.*

*வெற்றி ஒரு அனுபவம் என்றால் தோல்வியும் ஒரு அனுபவம் தான்.*

*உழைப்பதில் மகிழ்ச்சி வேண்டும். உழைக்க தயங்கி கொண்டு இருந்தால் தோல்வியை தழுவ நேரிடும். முயற்சி, பயிற்சி, உழைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை ஆகிய ஐந்தும் தான் வெற்றியின் ரகசியங்கள் ஆகும்.*

*உங்கள் திறமையை தூண்டி விட மற்றவர்களால் முடியும். உங்களை வளர்த்துக்கொள்ள உங்களால் மட்டுமே முடியும்.*

*ஒரு காரியத்தை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும் வெற்றிப்படிகளில் அடியெடுத்து வைக்கிறோம் என்று எண்ணினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.*

 *வெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க தயாரானால், அதற்கான வழிகள் நம் முன்னே பிரகாசமாக தெரியும். விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் வெற்றி நம்மை பின்தொடரும்.*
         
*நம்முடைய வாழ்க்கையை நாம்தான் தீர்மானிக்கிறோம். நல்லதோ கெட்டதோ எதையோ சகஜமாக எடுத்துக்கொள்ளங்கள்.*

*நம் பழக்கவழக்கங்களில் கெட்டக்காரியங்களை திட்டமிட்டு வெளியேற்றுங்கள்.*

*நல்ல அற்புதமான காரியங்களை மனதின் உள்ளே சீக்கரமாய் அனுமதியுங்கள்.*

*முக்கியமாக அனுசரணையாக எல்லோரிடத்திலும் பழகுங்கள்.*

*உங்களை திட்டுபவரை பார்த்து ஒரு புன்னகை புரியுங்கள். சின்ன சின்ன விஷயத்திற்க்கெல்லாம் யாராயிருந்தாலும் நன்றி சொல்லுங்கள். பொய் பேச யோசியுங்கள்.*

*இப்படி செய்தாலே நம் வாழ்க்கை பயனுள்ளதாக மாறும் மற்றவர்களும் நம்மைப்பார்த்து கற்றுக்கொள்வார்கள்.*

*இன்னொன்று மனதில் வஞ்சனையோ பொறாமை. பழிவாங்கும் என்னமோ இருக்ககூடாது.*

*வாழ்க்கையை நேசியுங்கள். வரங்களும் வட்டியில்லாமல் இலவசமாக உங்களைதேடி வரும்.*

*உங்கள் எண்ணங்களையும், சிந்தனைகளையும் தூய்மையானதாகவும், நேர்மறையானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும், உயர்ந்ததாகவும் எப்போதும் வைத்திருக்க முயற்சியுங்கள்.*

*உங்கள் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருக்கட்டும். அப்போது, உங்கள் வாழ்க்கை உங்களுக்கும், மற்றவர்களுக்கும் தானாகவே பயனுள்ளதாக மாறி விடும்.* நன்றி.

*#வாழ்த்துக்கள்.*

* வாழ்க வளமுடன்.* வெற்றி நிச்சயம்.
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை