இன்று ஓர் இனிய தகவல் 08/03/2022 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 08/03/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 
✡️✡️✡️✡️✡️✡️✡️   
    இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் !!

தோற்றுப் போய் விடுவோம், அதனால் அவமானமாய் இருக்கும் என்று நினைத்தே 
நம்மில் அனேகம்பேர் *தமக்குள் இருக்கும் திறமையை* அடையாளம் கண்டு கொள்ளாமல் தொலைத்து விடுகிறோம். 

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. 
ஒரு சிலர் அதைக் கண்டு கொண்டு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி, 
நமக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கின்றனர். 

ஆனால், ஒரு சிலரோ அதைக் கண்டு கொள்ளாமலேயே புறந்தள்ளுகின்றனர். 
போட்டி என்பது ஒரு நேர்மறையான விஷயம். நம்மைப் பொதுமேடையில் அளவிடக் கூடிய ஒரு கருவி. 

நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணர்த்தக் கூடிய காலத்தின் கண்ணாடி. 
போட்டி என்பது அரிதாரம் பூசிக் கொண்டு மேடையில் ஏறுவது மட்டும் தான் என்று இல்லை. 

அது நம் வாழ்க்கையிலும் இருக்கிறது. 
நம் மனதிற்கும், அறிவிற்கும் கூட ஓயாமல் போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

வாழ்வில் நாம் சந்திக்கத் தயாராகும் ஒவ்வொரு நிகழ்வுமே போட்டியின் ஒரு பரிமாணம் தான். போட்டி நம்மைப் பண்பட வைக்கும். புத்தம்புது அனுபங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கும். 

சகிப்புத்தன்மையையும், பொறாமையின்மையையும், வெற்றியையும், தோல்வியையும் ஒரே நிலையில் பார்க்கும் மனப்பக்குவத்தை மட்டும் நாம் அடைந்து விட்டால் போட்டி நல்லது மட்டுமல்ல, அது வாழ்க்கையை உயர்த்தும் கருவியாகவும் மாறி விடும்

வாழ்க வளமுடன்.
✡️✡️✡️✡️✡️✡️✡️
            வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை