இன்று ஓர் இனிய தகவல் 28/03/2022 திங்கட்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 28/03/2022 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் ✡️✡️✡️✡️✡️✡️✡️
வாழ்க்கை என்பது ஒரு ஓய்வில்லா ஓட்டம்...
அதில் உனக்கென இருப்பது ஒரு பாதை மட்டும்....
பிறரைப் பார்த்து நீ ஓடினால் வரும் விபத்து..
அவரின் வழி ஓடினால் வந்து சேரும் ஆபத்து.
சில நேரம் உன் வழியில் முட்கள் இருக்கும்..
பல நேரம் உன் விழியில் கண்ணீர் பெருக்கும்.
கொஞ்ச தூரம் கடந்து விட்டால் காலநிலை மாறும்.
அஞ்ச ஒன்றும் தேவையில்லை உன் நிலையும் மாறும்..
காத்திருந்து கிடைக்காதது இன்று நிச்சயம் ஒருநாள் உன்னைச் சேரும்..
உனக்கென எழுதாத ஒன்று , கட்டாயம் உன்னை விட்டு விலகி ஓடும் ..
விடாமுயற்சி மட்டுமே உன் எரிபொருள்...
உன்னை இயக்கும் ஒரே பொருள் ...
நண்பா,ஆசை என்பது மனிதனின் மூலக்கூறுகள்...
பேராசை என்பதே அவனின் நிர்மூலக் கூறுகள்...
ஆசையை விடுத்துப் புத்தனாக வேண்டாம்...
பேராசை நீக்கி மனிதனாக வேண்டும்...
உனக்கென நீ துவங்கிய ஓட்டம் கருவறையில் தொடங்கியது...
வெற்றி தான் இலக்கு..
வீண் வழக்குகளை விலக்கு...
தொட்டில் ,காடு இடைப்பட்ட ஓட்டம் வாழ்க்கை....
ஓடு ,ஓடு...உனக்கெனக் கொட்டிக் கிடக்கும் சுகங்களை கட்டிக் கொண்டு இன்னும் ஓடு...
திரும்பிப் பார்த்தால் கடந்த தூரம் புள்ளி தான்....
✡️✡️✡️✡️✡️✡️✡️
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் !வாழ்க வளமுடன் !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment