இன்று ஓர் இனிய தகவல் 29/03/2022 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 29/03/2022 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் ✡️✡️✡️✡️✡️✡️✡️
*_பிறரை சாராமல் இருத்தல் இயலாது!_*

"தன்னம்பிக்கை நன்னம்பிக்கை தான். ஆனால், அதே சமயத்தில். 

சில சமயங்களில் சிலவற்றைச் சார்ந்து தான் ஆக வேண்டும்.

 தனி மரம் எப்போதுமே தோப்பான வரலாறு இல்லை."
இப்படித்தான்.

பெரும் பணக்காரன் ஒருவன் அந்த ஜென் ஞானியைச் சந்தித்தான், “சுவாமி! என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. 

விளை நிலங்களும் ஏராளமாக உள்ளது. உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. எனவே நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை.

 எவரிடமிருந்தும் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை!” எனப் பெருமையடித்துக் கொண்டான்.
புன்சிரிப்போடு அதைக் கேட்ட ஞானி, “வா! சற்று தூரம் நடந்துவிட்டு வரலாம்!” என்றார்.

 “கடுமையான வெயிலில் போக வேண்டுமா?” எனத் தயங்கினாலும், ஞானி கூப்பிடும் போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான். 

சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த பணக்காரன், ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த நிழலும் தென்படவில்லை.

ஞானி கேட்டார், “என்ன தேடுகிறாய்?”
“நாம் சற்று இளைப்பாற ஏதாவது நிழல் இருக்கிறதா எனப் பார்த்தேன்!”
“ஏன் உன் நிழல் உள்ளதே, அதில் நீ ஒதுங்கிக்கலாமே?”
“சுவாமி! என் நிழலில் நான் எப்படி இளைப்பாற முடியும்?”
“என்னப்பா இது. நீ யாரையும் எதையும் சார்ந்து வாழத் தேவையில்லை.

 உன் பொருட்களே உன்னைக் காப்பாற்றும் என்று சற்று முன்புதானே கூறினாய்? ஆனால், இப்போது உன் நிழலே உனக்கு உதவவில்லை என்கிறாயே?” என்றார்.

அது கேட்டு அந்தப் பணக்காரன் உண்மையை உணர்ந்தான். "தான்" என்னும் அந்த அகந்தையை விட்டொழித்தான்.

 எல்லோரையும் நேசிக்கத் துவங்கினான். நாமும் கூட இனி எல்லோரையும் நேசிப்போம்.

 அட!, யாரையுமே நேசிக்க முடியாவிட்டாலும் கூடப் போகிறது. நம்மையாவது நாம் நேசிப்போமே.

✡️✡️✡️✡️✡️✡️✡️
            வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் !வாழ்க வளமுடன் !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை