இன்று ஓர் இனிய தகவல் 30/01/2023 திங்கள்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 30/01/2023 திங்கள்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 சிலமுறை என்னை நானே தட்டிக்கொள்ள எனக்கு நானே எழுதிக்கொண்ட வரிகள்...
இங்கே உங்களுக்காக...
பிறப்பில் கருப்பே என்று
காக்கை கவலைப் படவில்லை
ஏறி மிதிக்கிறார்களே என்று
எருது கவலைப் படவில்லை
கோடையில் சபிக்கிரார்களே என்று
ஞாயிறு கவலைப் படவில்லை..!
நாளை நமது என்று
நம்பிக்கையுடன் நடைபோட்டு
எழுது உன் பெயரை இமயத்தில்
எட்டுத் திக்கும் முழங்க...
எவரெஸ்டும் ஏங்கட்டும்
உன் உயரத்தை எட்ட..!
உன்னை ஏளனம் செய்தோர் வீழ்வார்
ஆதவனைக் கண்டு அகலும் பனி போல..!
அவர்கள் எலும்புக்கு அலையும் நாய்கள்.
தாமரையில் நீர் போல,
தண்ணீரில் என்னை போல தழுவிக் கொள்வர்,
பானையில் சோறிருந்தால் சொந்தமாகும்
பூனை போல...!
பாவம்.!
இந்த சபிக்கப்பட்ட உலகத்திற்கு
சாபமிட மட்டுமே தெரியும்...
நீ மேகமாய் இருப்பதால்
காற்றாய் வரும் தோல்விகள் - உன்னை
களைத்து விடுகிற தென்று கவலை கொள்ளாதே.
காற்றால் உன்னை களைக்கத்தான் முடியும்,
எதிர்காலத்தில் அடை மழையாய் அடிக்கப் போகும்
உன்னை அழிக்க முடியாது..! வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment