யார் மெய்ஞானி?
இயற்கையும் மெய்ஞானமும்!
யார் மெய்ஞானி?
இருளும் (மெய்ப்பொருள்-GOD), ஐம்பூதங்களாலான அண்டங்களும், ஐம்பூதங்களும் முறையாகக்கூடி இயங்கும் ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை அனைத்து உயிரினங்களும் இயற்கை.
மெய்ப்பொருள் முதல் மனித மனம் வரை இயற்கையின் அமைப்பு, இயக்கம், விளைவுகளை தெளிவாக அறிந்த அறிவே.மெய்ஞானம்.
மெய்ஞானம் ஓங்கி வாழும் மெய்ஞானிக்கு, 1)நான் என்ற அகந்தையும், எனது என்ற பற்றும் பாசமும் அற்றுப் போகும். அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அன்பு மலரும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் யாதும் ஊரே யாவரும் கேளிர்"என்ற உண்மை விளங்கி விடும்.
2) இன்பம் துன்பம், அமைதி பேரின்பம் என்பது என்ன என்பது தெளிவாக விளங்கி விடும்.
3) பேராசை முதலான ஆறு விலங்கு குணங்களும் நிறைமனம் முதலான ஆறு மனித குணங்களாக மாற்றம் பெற்று விடும்.
4) உடல் நலத்தோடு நீண்ட காலம் வாழும் அறிவும், நிறை செல்வந்தராக வாழும் அறிவும், உயர் புகழோடு வாழும் அறிவும் உள்ளுணர்வாக விளங்கி விடும்.
5)நிகழ்கால உலக இன்பங்களைத் துய்த்து மன நிறைவு பெற்று துன்பமோ கவலையோ இல்லாமல் வாழ்வாங்கு வாழ்வார்.
"தன்னை அறிந்தவன் தத்துவஞானி.
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை என்கிறார் திருமூலர்.
தனக்குவமை இல்லாததான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்கிறார் திருவள்ளுவர்.
வாழ்வாங்கு வாழும் மெய்ஞானியே இறைநிலையை அடைவான்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்கிறார் திருவள்ளுவர்.
மெய்ப்பொருளை அறிந்து நீங்களும் மெய்ஞானியாக வாழ்வீர்!
உதவிக்கு அலைபேசி எண்:
7010955300
"Yoga is an art of understanding the nature fully to discover the truth of oneness.
வாழ்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
தொகுத்தவர்:
முதுநிலை ஞானாசிரியர் அருள்நிதி.
வேதசுப்பையா.
Comments
Post a Comment