மனிதன் ஏன் கடவுளை அறிந்து வாழ வேண்டும்?

 மனிதன் ஏன் கடவுளை அறிந்து வாழ வேண்டும்? 


அகத்தவம் (தியானம்) செய்து கடவுளை அறிந்த மனிதனுக்கே,

1) பொருள் ஈட்டி, புலன் இன்பங்களைத் துய்த்து வாழ்வதற்கே கடவுள் மனிதனாகப் பிறந்து வாழும் உண்மை(தத்துவம்) விளங்கும். 


2)இயற்கையிலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் தன்னை வேறாகக் கருதும் தன்முனைப்பு (ஆணவம்)  அழிந்து சகோதர அன்பு (சம உணர்வு) மலரும்.     


3)மனதில் உள்ள பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு தீயகுணங்களும் நிறைமனம், பொறுமை, ஈகை, கற்பு, சமஉணர்வு, மன்னிப்பு ஆகிய ஆறு நற்குணங்களாக மாற்றம் பெற்று மனம் தூய்மை பெறும்.  


4)மனத்தூய்மை பெற்ற மனிதனே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய இயற்கைநீதியை மதித்து, சமுதாயத்தோடு இணைந்து தேவையான பொருட்களை அறவழியில்  ஈட்டிப் பகிர்ந்து, தனக்கும் பிறருக்கும் நல்லதைச் செய்து உடல் நலத்தோடும், பொருள் வளத்தோடும், நட்பு நலத்தோடும், உலக இன்பங்களைத் துய்த்து *மனநிறைவு(அமைதி)பெற்று இறைநிலையை (பிறவாதநிலையை) அடைவான்.


 கடவுளை அறியும் கலையைக் கற்று எல்லோரும் வாழ்வாங்கு வாழ்ந்து இறைநிலையை அடைய அருகிலுள்ள அறிவுத்திருக்கோயிலை தொடர்பு கொள்வீர்!

வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை