இன்று ஓர் இனிய தகவல் 18/12/2021 சனிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 18/12/2021 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🪴🪴
மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
*“என்னதான் சரியாகச் செய்தாலும், ஒண்ணுமே சரியா வர மாட்டேங்குதே”*
என்று சிலர் எரிச்சல் படுவதை பார்த்திருப்பீர்கள். செய்யக்கூடிய செயலை பற்றிய முழுமையான விவரம் தெரியாததால் தான் இந்த பிரச்சினை இவர்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. அவர்கள் இதை முழுமையாக உணர்வதுமில்லை.
சிலர் தங்களிடம் அப்படி என்ன தான் குறை?’ என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். நமக்கு என்ன குறை என்று தெரியாததால் தான் நிறைய பிரச்சினைகளே உருவாகின்றன. தன் குற்றம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால், பிறர் செய்யும் சிறிய தவறு கூட நமக்கு பெரிய குற்றங்களாக தெரிந்துவிடும். இது தான் மனிதர்களின் இயல்பு.
எந்த ஒரு செயலை செய்தாலும் அதற்குரிய பலன் நிச்சயம் உண்டு. இது தான் இயற்கை நமக்கு கற்றுத் தரும் உன்னத பாடம். எண்ணம், சொல், செயல் இவை மூன்றிலும் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதற்காக நாம் நாட்கணக்கில் கடும் தவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு செயலையும் நாம் கடனே’ என்று செய்யாமல் தன் கடமையாக கருதி செய்து வந்தாலே போதும்.
ஒவ்வொரு முறையும் நமக்கு வரும் சோதனைகளைக் கடந்து நாம் அவற்றை சாதனைகளாக்க முற்படும் போது தான் நாம் ஒவ்வொரு படியாக வளர ஆரம்பிக்கிறோம். இதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம். பிறரோடு ஒத்து வாழும் சூழ்நிலையை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் போது சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை போன்ற நற்குணங்கள் நம்மை வந்து சேர்கிறது.
இதனால், வாழ்க்கையின் பல தளங்களை நம்மால் எளிமையாக கடக்க முடிகிறது. சுயநலம் கருதாமல் பிறருக்கு உதவி செய்வதிலேயே நாம் ஆனந்தபடுகிறோம். இதனால் எப்போதும் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற நற்குணங்களை நாம் தொடர்ந்து கடைபிடித்து வரும்போது, நாமே நினைத்தாலும் கூட தீய செயல்களை செய்வதற்கு நம் மனம் அனுமதிக்காது. இதுவே மன அமைதிக்கு அடிபடை.
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்😊
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம் . வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment