இன்று ஓர் இனிய தகவல் 07/01/2022 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 07/01/2022 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
                      ''வாழ்வில் வெற்றி பெற...''
..............................
வாழ்க்கை அனைவருக்கும் சுலபமாக அமைந்து விடுவதில்லை. கோடீஸ்வரனாகவே இருந்தாலுமே கூட, அவர்களுக்கு இருக்கும் வலி என்ன,, அவர்கள் கடந்து வரும் கடினமான சூழல் என்ன என்பது குறித்து நாம் அறிய இயலாது. 

பொதுவாகவே, ஒரு தொழிலதிபர், அரசியல்வாதி, நடிகர் இருந்தால், அவங்களுக்கு என்னப்பா சொகுசான வாழ்க்கை, ஆடம்பரமா இருக்காங்க..என்று நாம் இயல்பாகக் கூறுவதுண்டு. 

ஆனால், அந்த இடத்தைப் பிடிக்க அவர்கள் எத்தனை துயரங்களை, தோல்விகளை, தடைகளைக் கடந்து வந்தார்கள். அவர்களது கடந்த கால வாழ்க்கையானது எத்தகைய கரடுமுரடான பாதையாக இருந்தது என நாம் அறிந்திருக்க மாட்டோம்.

அதில் ஒருவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்..( ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்..)

பெரும்பாலானோருக்கு ‘’ஸ்டீவ் ஜாப்ஸ்’’ என்றாலே முதலில் எண்ணத்தில் உதிப்பது ஆப்பிள் தான். இவர் உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலுக்கு முந்தியடிக்கும் போட்டியில் கலந்து கொண்டவர் அல்ல. 

தனது அயராது உழைப்பால், கடுமையான முயற்சியால் எண்ணற்றத் தடைகளை, தோல்விகளைக் கடந்து வந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

தனது வாழ்வின் சில கட்டங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் பொருளாதாரரீதியாக மிகவும் கீழ் மட்டத்திற்குச் சென்று உள்ளார். இது பலரும் அறியாத உண்மை.

வாரம் ஒரு முறையாவது நல்ல உணவு கிடைக்கும் என்பதால் சில நாட்கள் ஏழு மைல் தூரம் நடந்து சென்று ஒரு கோவிலில் வழங்கப்படும் உணவை உண்டுள்ளாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆம்.,நண்பர்களே..,

வாழ்க்கையில் நமக்கு வரும் , துன்பங்கள், துயரங்கள் இவற்றை எல்லாம் எதிர்கொள்ளும் போது நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பது இரண்டாம்பட்சம் தான். 

அந்தப் பிரச்னையை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது தான் ரொம்பவும் முக்கியம். 

''How You make it'' என்பதை விட.,

''How you take it'' என்பது தான் முக்கியம்.. வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை