இன்று ஓர் இனிய தகவல் 11/01/2022 செவ்வாய்க்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 11/01/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
தோல்வி உங்களைத் துரத்துகிறது என்றால், நீங்கள் வெற்றியை நெருங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
வெற்றிக்கான முன்படியில் கால் வைக்கத் தடுமாறும் போது,கைபிடித்து வழி நடத்துகின்றது ஒவ்வொரு முதற்தோல்வியும்.
நீங்கள் தோற்பதுமில்லை, தோற்கடிக்கப்படுவதுமில்லை. நீங்கள் வெல்வதற்கான கோடியில் ஒரு முயற்சி பிழையானது, அவ்வளவே.
உங்கள் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.
மூச்சு விட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை. அந்த மூச்சிருக்கும் வரை முயற்சி செய்து கொண்டிருப்பவனே மனிதன்.
நீங்கள் வெற்றியடைவதை உங்களைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது.
வாழ்வின் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டால் நொடிகள் தோறும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருப்பதை உணர முடியும்.
நல்ல எண்ணமும் முயற்சியும் கை கோர்த்துச் செல்லும் போது தான் விடியல் கீற்றுகள் நம் மீது விழுவதை உணர முடியும்
"உள்ளதை உணர்வோம் நல்லதை நினைப்போம்"
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment