இன்று ஓர் இனிய தகவல் 14/02/2023 செவ்வாய்க்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 14/02/2023 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள்  அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹

   வாழ்க்கை ஒரு வட்டம்

யாரோ சொன்னது,

யார் என்று தெரியாது.


சொன்னது சரி தான்...!


கடிகார முள் சுழலும் வட்டம் போல...!


அதில்..!


இலக்கங்கள் தினம் கூடும் வயதுகள்...


காலை, மாலை உன் பருவங்கள்...


ஒரு முள் நீ,

மறு முள் நீ அறியா மனிதர்கள்...


உன் சுற்று முடிந்தவுடன் தாமதம் இல்லாமல்


மற்றவரின் சுற்று ஆரம்பமாகி விடுகிறது...


கடிகாரத்தின் தொடக்கம், முடிவும்

ஒரே இடமாய் இருக்கலாம்...


ஆனால் வாழ்க்கையோ...


கருவறையும் மண்ணறையுமாய் இருக்கும்....


நொடியினைக் கட்டிப் போட கயிறு தேடுகிறாய்....


நீ கயிறு தேடிய நொடிகளைக் கூட 

உன்னால் கட்டிப் போட முடியாது..


நிமிடத்தின் கழுத்தை இறுக்கிப் பிடிக்க,பின்னால் துரத்துகிறாய்...


நீ துரத்தி ஓடிய நிமிடங்கள் கூட

உன்னை விட வேகமாய் ஓடுகிறது...


மணித்தியாலம் மட்டும் மெல்ல செல்கிறது என்று நினைக்கிறாயா?


நினைத்தது, மெல்ல நகர்ந்து,

நிமிடமாய் ஓடி, கடைசியில்.....


நீ கயிறு தேடுவதற்குள்

முடிந்து விடும் உன் நேரம்....


நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வீணாக்காமல்,


அந்த நொடியின் உயிரை விட்டுப் பிரிவதில்லை..🕊️🕊️🕊️🕊️ 🕊️

                 வெற்றி நிச்சயம்

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை